இலங்கை

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

  • March 3, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேவேளை வரும் ஏப்ரல் மாதம் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பொழுதுபோக்கு

‘நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி’-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • March 3, 2025
  • 0 Comments

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் தன்னுடைய மனைவி அபிராமியை பங்குதாரர்களாக வைத்து ஈசன் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்நிறுவனம் மூலம் ஜக ஜால கில்லாடி என்கிற படத்தை தயாரித்து. அப்படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்தனர். இப்படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த கடனை 30 சதவீதம் […]

உலகம்

போர் அபத்தமாக தோன்றுகிறது – மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ்

  • March 3, 2025
  • 0 Comments

உலகில் இடம்பெறும் போர் அபத்தமாக தோன்றுகிறது என்று வாட்டிகன் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அமைதி கோரி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உக்ரைன், லெபனான், மியான்மர், சூடான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் நிலவும் போர் வன்முறைகளை பற்றி கவலை தெரிவித்துள்ளார். தமது உடல் நலத்துக்காக பிரார்த்தனை செய்யும் அன்பர்கள் அனைவரும் உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யும்படி அந்த அறிக்கையில் போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவமனையில் உயிருடன் போராடி சிகிச்சை பெற்று […]

உலகம் செய்தி

ஒரே மாதத்தில் 16,000 பேர் பணிநீக்கம் – உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை

  • March 3, 2025
  • 0 Comments

உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் கடந்த மாதம் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது. இந்த நிறுவனங்களை மறுசீரமைத்தல், செலவுகளைக் குறைத்தல், ஊழியர்களுக்கு பதிலாக செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டெக் நிறுவனங்கள் பலரும் பெப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 16,000 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் […]

பொழுதுபோக்கு

Oscars 2025 : பல விருதுகளை தட்டித்தூக்கிய படம்… முழு விபரம்

  • March 3, 2025
  • 0 Comments

ஆஸ்கார்ஸ் 2025-ல் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை டச்சு மொழி திரைப்படமான ‘ஐ’ம் நாட் எ ரோபோ’ பெற்றது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருது விழாவில் அனோரா திரைப்படம் தான் அதிக விருதுகளை வென்றுள்ளது. அப்படம் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மிகே மேடிசன்), சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய ஐந்து பிரிவுகளில் அனோரா படத்துக்கு விருது கிடைத்தது. அடுத்ததாக தி […]

இலங்கை

இலங்கையின் இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு எச்சரிக்கை

  • March 3, 2025
  • 0 Comments

இலங்கையின் கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் கூறப்படுகிறது. மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழைமையான தங்க நகரம்!

  • March 3, 2025
  • 0 Comments

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் 4 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்துறை மையம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரத்தில் டோலமிக் காலத்தைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள் உள்பட பல்வேறு வகையான அரிய பழங்காலக் கலைப்பொருள்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இப்பகுதியில் […]

வாழ்வியல்

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிகள்

  • March 3, 2025
  • 0 Comments

இதய நோய் எதனால் ஏற்படுகிறது? புகைபிடித்தல் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போதிய உடற்பயிற்சி இல்லாதது ஆகியவை காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யலாம்? 1) மருத்துவப் பரிசோதனை அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்வதால் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு ஆகியவற்றைச் சரிபார்க்கலாம். அதன் அடிப்படையில் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கணிக்கலாம் என்று கூறுகிறது New York Times இணையத்தளம். 2) சிகரெட் பழக்கத்தைக் […]

செய்தி

ஆஸ்திரேலியா சட்டவிரோத குடியேற்றவாசிகள் வசித்த தேவாலயத்தில் தீ விபத்து

  • March 3, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்போர்னில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்போர்னில் உள்ள பார்க் தெருவில் உள்ள ஒரு ஆளில்லாத தேவாலயத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை சுமார் 8.45 மணியளவில் மாவட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன. அவர்கள் வந்தபோது தேவாலயத்தின் கூரையிலிருந்து ஒரு பெரிய புகை மூட்டம் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அருகிலுள்ள […]

உலகம்

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு – மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

  • March 3, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு, மசகு எண்ணெயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.31 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.76 அமெரிக்க […]