வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி – எட்டு பேர் காயம்!
வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தற்கொலைக் குண்டுதாக்குதல், மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நேற்று பல்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் பத்திரிகையாளர்களை கௌரவிப்பதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிந்துள்ளதுடன் எட்டுபேர் காயமடைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதலுக்குப் பிறகு மூன்று நாட்கள் இடைவெளியில் சமீபத்திய குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.