இலங்கை

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!

  • April 10, 2023
  • 0 Comments

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையிடம் இருந்த கையிருப்பின் பெறுமதி 2 ஆயிரத்து 217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கையிருப்பில் இருந்த 2 ஆயிரத்து 121 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 4.5 வீத அதிகரிப்பாகும். உத்தியோபூர்வ கையிருப்பு சொத்துகளில் உள்ளடக்கப்படும் அந்நிய செலாவணி கையிருப்பதாக 2 ஆயிரத்து 65 மில்லியன் டொலர்களில் இருந்து 2 ஆயிரத்து 183 மில்லியன் டொலர்களாக […]

இலங்கை

இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்!

  • April 10, 2023
  • 0 Comments

அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்கவுள்ளது. இதன்படி ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சி திட்டத்திற்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகிறது. இந்த நன்கொடையானது நான்கு மாத காலத்திற்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கொள்வனவு மூலம் திரிபோஷா போன்ற வலுவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இலங்கைக்கு ஜப்பான் இதுவரை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை […]

இலங்கை

8 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு வேண்டும் – எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்!

  • April 10, 2023
  • 0 Comments

தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவிற்கு மத்தியில் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியும் , வட்டி வீதம் மற்றும் வரி என்பவற்றைக் குறைக்குமாறும் வலியுறுத்தி இவ்வாறு தொழிற்சங்க  நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார துற, கல்வித்துறை , பல்கலைக்கழகங்கள், அரச நிர்வாக சேவை, வங்கி, துறைமுகம், பெற்றோலியத்துறை, நீர் வழங்கல் துறை, தபால் சேவை உள்ளிட்ட அரச மற்றும் அரச […]

இலங்கை

சிவன் ஆலாயம் இடிக்கப்பட்ட விவகாரம் – அருத்ட்தந்தை சக்திவேல் கண்டனம்!

  • April 10, 2023
  • 0 Comments

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி வடக்கு பிரதேச போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். […]

இலங்கை

ரூபாவின் பெறுமதி இவ்வாண்டு இறுதியில் சரிவை சந்திக்கக்கூடும்

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலரொன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஐந்தில் ஒருபங்கு இவ்வாண்டு இறுதியில் சரிவை சந்திக்கக்கூடுமென ஃபிட்ச் சொலியூஷன்ஸ் எதிர்வுகூறியுள்ளது. சீனாவின் நிதியியல் உத்தரவாதத்தைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வெகுவிரைவில் கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் இறுக்கமாக்கப்பட்ட நாணய கொள்கையும் இலங்கை ரூபாவின்மீது அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஃபிட்ச் சொலியூஷன்ஸ் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கை

குரங்கு பணியாளர்களால் சரிந்த தாய்லாந்தின் சந்தை வாய்ப்பு !

  • April 10, 2023
  • 0 Comments

குரங்குகளை வேலைக்குப் பயன்படுத்துவதால் உலகின் முக்கிய தென்னை சார் உற்பத்தி விநியோகஸ்த்தரான தாய்லாந்திடமிருந்து உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதை பெரும்பாலான  சர்வதேச நிறுவனங்கள் தவிர்த்து வரும் நிலையில் , தனது தென்னை சார் உற்பத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை இலங்கை பெற முடியும். PETA  அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, வோல்மார்ட், கோஸ்ட்கோ, டார்கட் அன்ட் க்ரோகர் போன்ற உலகின் முக்கிய விற்பனையாளர்கள், வலுக்கட்டாயமாக குரங்குகளைப் பணியமர்த்துவதாக குற்றஞ்சாட்டப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த சில விநியோகஸ்தர்களிடமிருந்து தேங்காய்பால் உள்ளிட்ட […]

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி : தொடர்ந்து ஏற்றத்தில் இலங்கை ரூபாய்!

  • April 10, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை (09) உயர்வடைந்துள்ளது. அதற்கமைய  இன்றைய  தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 307.36 ரூபாவாகவும் அதன் விற்பனை பெறுமதி 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேவேளை நேற்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 313.77 ரூபாவாகவும்இ விற்பனை பெறுமதி 331.05 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

நிதிப் பற்றாக்குறையால் ஏலத்தில் விடப்படவுள்ள அமைச்சர்களின் வாகனங்கள்!

  • April 10, 2023
  • 0 Comments

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 6 வாகனங்களை சீர் செய்ய நிதிப் பற்றாக்குறை காரணமாக அவற்றை ஏலம் விடுவதற்கு கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி Land Cruiser V8, Land Rover, Micro, Tata வாகனங்கள் 2020 முதல் அமைச்சக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் கைத்தொழில் அமைச்சின் பிரதம கைத்தொழில் சேவை அதிகாரி கிஹான் சுமனசேகரவிடம் கூறுகையில்,இந்த வாகனங்கள் 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், இந்த வாகனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சீர்செய்வதற்கு […]

இலங்கை

சுயாதீன உள்ளகப்பொறிமுறை கையாளப்படும் என இலங்கை அரசாங்கம் மீண்டும் தெரிவிப்

  • April 10, 2023
  • 0 Comments

நாட்டின் மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக தீரவுகான இலங்கை உறுதியாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக சுட்டிக்காட்டியுள்ளார் அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்கு ஏற்புடைய   முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது என்றும்  ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமானது நாட்டுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கிவருகின்றது எனக் […]

இலங்கை

மட்டக்களப்பு பிரதேசத்தில் நடுக் காட்டில் இருந்து மீட்கப்பட்ட முன்னாள் போராளி..

  • April 10, 2023
  • 0 Comments

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என  கூறப்படும் நபர் ஒருவர் நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து    நேற்றையதினம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மீட்கப்பட்டவர் கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட  முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் என தெரியவந்துள்ளது. கைவிடப்பட்ட முன்னாள் போராளி தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள […]