இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிக்க காரணம் வெளியானது!

  • April 11, 2023
  • 0 Comments

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க இதனை தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருந்த கணிப்பு தொடர்பில் பேராசிரியர் தனது […]

இலங்கை செய்தி

இலங்கையில் டொலரைக் கொடுத்து ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் மக்கள்

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றது. இதனால், கொழும்பு பிரதான நாணயமாற்று நிலையங்களில், டொலரைக் கொடுத்து, ரூபாவைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி, நேற்றைய தினம், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.36 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 325.52 ரூபாவாகவும் இருந்தது. இந்த நிலையில், இன்றைய […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – ஒன்றரை வயது மகளுக்கு தந்தை செய்த செயல்

  • April 11, 2023
  • 0 Comments

பக்கமுன பிரதேசத்தில் ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பக்கமுன பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளான ஒன்றரை வயது சிறுமி முன்னதாக தனது பாட்டியின் பராமரிப்பில் வெயாங்கொடையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து பக்கமுன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். சிறுமி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ காட்சிகளை பாட்டிக்கு பலமுறை […]

இலங்கை செய்தி

உயர் தர பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களின் பரிதாப நிலை

  • April 11, 2023
  • 0 Comments

உயர் தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார். விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏறபட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி […]

இலங்கை செய்தி

அடுத்த வாரம் முதல் தொடர் தொழிற்சங்க போராட்டம்!! இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் சமீபத்திய வரித் திருத்தம் தொடர்பான தொழிற்சங்கங்களுக்கும்  நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற கலந்துரையாடல் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்தது. இதனையடுத்து, தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும். இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பை தொடர்ந்து, தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் அருண சாந்தஆர்ச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கலந்துரையாடலின் போது எதிர்பார்த்த தீர்வுகள் முன்மொழியப்படவில்லை. இதேவேளை, சுகாதாரம் மற்றும் தபால் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் எதிர்வரும் வாரத்தில் வேலைநிறுத்தப் […]

இலங்கை செய்தி

மனைவியிடம் காசு வாங்க குழந்தையை அடித்து துன்புறுத்திய தந்தை

  • April 11, 2023
  • 0 Comments

ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஷ் ரொஹான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (10) ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தை பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவியிடம் இருந்து பணம் பெறுவதற்காக, […]

இலங்கை செய்தி

கொழும்பில் ரயில் கழிவறைக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

  • April 11, 2023
  • 0 Comments

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி  இருந்து பயணித்த விரைவு ரயிலின் கழிவறைக்குள் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் கைவிடப்பட்ட சிசு இரவு 7.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சிசு  கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

மாற்றாந்தாயின் கோர முகம் – 17 வயது சிறுமியை அடித்து கொடுமைப்படுத்திய கொடூரம்

  • April 11, 2023
  • 0 Comments

ராகம – குருகுலாவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுமியின் 39 வயதுடைய சித்தியை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமயறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு வடக்கில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்துவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் அதிகாரியின் கண்காணிப்பில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய தினத்தை விடவும், இன்றைய தினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என அந்த சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். நேற்றைய தினம் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 145000 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட […]

இலங்கை செய்தி

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் அடக்குமுறை : ஐ.நாவிடம் வலியுறுத்தி போராட்டம்!

  • April 11, 2023
  • 0 Comments

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் மோசமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், வசந்த முதலிகே உள்ளிட்டவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் இருவர் உயிரிழந்தமைக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது. தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரால் உபயோகிக்கப்படும் கண்ணீர்புகைக்குண்டுகள் காலாவதியானவை என்றும், விஷத்தன்மையுடையவை […]