இலங்கை செய்தி

OnmaxDT உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

லங்கையில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) சட்டமா அதிபரிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka மற்றும் OnmaxDT ஆகிய நிறுவனங்கள் வங்கிச் சட்டத்தின் 83C இன் விதிகளை மீறியுள்ளனவா என்பதைக் கண்டறிய இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை […]

இலங்கை செய்தி

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்திரமடையும்!

  • April 11, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக அதிகரித்துச்செல்லுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ஒருவாரகாலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்பயாக அதிகரித்துச்சென்றதுடன், மீண்டும் கடந்தவார இறுதியில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இவ்வாறானதொரு பின்னணியில்  ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் படிப்படியாக அதிகரித்துச்செல்லுமெனத் […]

இலங்கை செய்தி

யாழில் தாய்ப்பால் கொடுக்க மறுத்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

  • April 11, 2023
  • 0 Comments

  வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் குழந்தை உயிரிழந்த செய்தி ஒன்று அண்மையில் வெளியானது. இந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.  

இலங்கை செய்தி

இலங்கை வந்த சுவீடன் பிரஜைக்கு நேர்ந்த கதி!

  • April 11, 2023
  • 0 Comments

பொத்துவில் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுவீடன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். தனது உணவு மற்றும் பானங்களுக்கு பணம் கொடுக்கவில்லை எனக் கூறி உதைத்து அவர் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஹோட்டலில் பணியாற்றும் இருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான குறித்த சுற்றுலாப் பயணி, உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொத்துவில் நெடுஞ்சாலையின் குறுக்கே இரவு வேளையில் ஓடியபோது, காரில் மோதி படுகாயமடைந்து பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

இலங்கை செய்தி

காங்கேசன்துறை – காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

  • April 11, 2023
  • 0 Comments

காங்கேசன்துறை – காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த சேவைக்கு ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க மற்றும் குடிவரவு – குடியகல்வு சாவடியை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது. முதலில் 120 பயணிகள் […]

இலங்கை செய்தி

கொழும்பில் கடத்திச் செல்லப்பட்ட சீன பெண் மீட்பு

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்த சீனப் பெண்ணை கடத்திச் சென்று அவரை விடுவிக்க 15,000 யுவான் கப்பம் கோரிய சீனப் பெண் கொள்ளுப்பிட்டி அஸ்டோரியா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சீனப் பெண், தன்னை யாரோ கடத்திச் சென்றதாகவும், தனக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்வதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சீனப் பெண்ணின் உறவினர் ஒருவர் இந்த நாட்டிலுள்ள சீனத் தூதுவருக்கு ஏதோ […]

இலங்கை செய்தி

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண தமிழ் இளைஞர்

  • April 11, 2023
  • 0 Comments

இன்றும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் ராஜஸ்தான் றோயல் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும் , சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன. தற்போது இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடன் குமார் சங்கக்கார கதைத்திருந்தார். […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நாளை ( 21) விசேட உரையாற்றவுள்ளார்

  • April 11, 2023
  • 0 Comments

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய  செயற்குழுவின் அனுமதியை  இலங்கை  பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இது குறித்து ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நாளை ( 21) விசேட உரையாற்றவுள்ளார் இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களில் எமது பொருளாதார எதிர்காலத்திற்கு  இதனை விட மிகவும் நெருக்கடியான காலகட்டம் இருந்ததில்லை. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மற்றும் சாதகமான செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். நமது […]

இலங்கை செய்தி

வித்தியா கொலை வழக்கில் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணை

  • April 11, 2023
  • 0 Comments

கடந்த 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (மார்ச் 20) நீதியரசர்களான ப்ரீதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த […]

இலங்கை செய்தி

டொலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸின் அரச பங்குகளை விற்க அனுமதி

  • April 11, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹாஸ்பிடல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிலும் திறைசேரி செயலாளரிடம் உள்ள பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, திறைசேரி செயலாளரிடம் அந்தந்த நிறுவனங்களில் உள்ள பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரியின் செயலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும்லங்கா ஹாஸ்பிடல்ஸ் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார். கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களான ஸ்ரீலங்கா டெலிகொம்  மற்றும் […]