இலங்கை செய்தி

அரச நிறுவனங்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

  • April 11, 2023
  • 0 Comments

அனைத்து அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். பெரும்பாலானஅமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கிணங்க அனைத்து அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள்,மாகாண சபைகள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன […]

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கும் சுமந்திரன்!

  • April 11, 2023
  • 0 Comments

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மோசமானது என சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ.சுமந்திரன்  அதனை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார். இதேநேரம் மாகாண சபை தேர்தலையும் நிதி நிலைமையை காரணம் காட்டி உள்ளூராட்சித் தேர்தலையும் நடத்தாமல் இருப்பது தனி மனித சர்வாதிகார ஆட்சியை காட்டி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மோசமான சூழலில் இச்சட்டத்தை கொண்டுவந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான […]

இலங்கை செய்தி

நிலக்கரி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி!

  • April 11, 2023
  • 0 Comments

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2023 – 2024 காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரி பெறுகைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது. 2023- 2024 காலப்பகுதிக்கு நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்கு 2.25 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணைக்கு வரும் ரிட் மனு!

  • April 11, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை மே மாதம் 9 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சோபித்த ராஜகருணா மற்றும்  தம்மிக்க கனேபொலகே ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். குறித்த தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துமாறு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் இணக்கப்பாட்டிற்கு பிறகு அமெரிக்க தூதுவர் மற்றும் திறைசேரி செயலாளருக்கு இடையில் விசேட சந்திப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு எட்டப்பட்டதையடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது  சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அங்கீகாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை  மீட்சியை ஊக்குவிப்பதற்காக வேலைத்திட்டம் என்பவற்றை உறுதிசெய்ய தேவையான மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து  நல்லாட்சி,  திறமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் ஈடுபடுத்தும் பொதுக் கலந்தாய்வை எளிதாக்கும் சீர்திருத்தங்கள்,  குரல்களின் பன்முகத்தன்மையை […]

இலங்கை செய்தி

பாடசாலை ஒன்றில் மாணவனை மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை!

  • April 11, 2023
  • 0 Comments

பா கம்பஹா – பல்லேவெல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 7 வயதான பாடசாலை மாணவணை மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை புரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 12 வயதான மாணவனை தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார் மேலும் சில மாணவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஐந்து மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பாரிய பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக […]

இலங்கை செய்தி

கேக் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும்  கேக்களை தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி […]

இலங்கை செய்தி

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அவலுவூட்டல் குறித்த தேசியக் கொள்கைக்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு UNFPA பாராட்டு

  • April 11, 2023
  • 0 Comments

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள்  சனத்தொகை  நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப்  பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை  நேற்று […]

இலங்கை செய்தி

பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் இந்த வலயத்தின் முதல் நாடாக இலங்கை மாற்றப்படும் என்கிறார் ஜனாதிபதி

  • April 11, 2023
  • 0 Comments

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை  அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும்  ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள  முதலீட்டாளர்களுடன் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் […]

இலங்கை செய்தி

மதவாச்சி ரயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பிற்கு மத்தியில் எரிபொருள் திருட்டு

  • April 11, 2023
  • 0 Comments

மதவாச்சி ரயில் நிலையத்தில் எரிபொருள் தாங்கியின் சீல்களை உடைத்து 6 லட்சத்து 11,550 ரூபாய் பெறுமதியான டீசல் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து சுமார் 1500 லீற்றர் டீசல் திருடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. 24 மணிநேர பாதுகாப்பு இருந்த போதிலும் எரிபொருள் திருடப்படுவது பிரச்சினைக்குரியது எனவும் கூட்டமைப்பு […]