செய்தி வட அமெரிக்கா

கின்னஸில் இடம்பிடித்துள்ள ஒரு வயது இரட்டையர்கள்!

கரு முழுமையாக முதிர்வுறாமல் 22 வாரங்களிலேயே பிறந்து, ஆகக் குறைந்த நாள்களில் பிறந்த இரட்டையர்களாக கனடாவைச் சேர்ந்த ஏடியா மற்றும் ஏட்ரியல் சகோதரர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் . பொதுவாக, முழுமையான கர்ப்ப காலம் 40 வாரங்களாக இருக்கும் நிலையில், ஏடியாவும் ஏட்ரியலும் 18 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டனர். அதாவது குழந்தைகள் இருவரும் 126 நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது 2022 மார்ச் 4ம் திகதி பிறந்தனர்.கருவுற்று 21 வாரங்கள் ஐந்து நாள்களிலேயே ஷகினா ராஜேந்திரத்திற்கு மகப்பேற்று வலி […]

செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோவில் மினிவானில் இருந்து நான்கு அமெரிக்கர்கள் கடத்தப்பட்டனர்

வடகிழக்கு மெக்சிகோவில் கடத்தப்பட்ட நான்கு அமெரிக்கர்கள் மருந்து வாங்குவதற்காக எல்லையைத் தாண்டியதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடிமக்கள் தமௌலிபாஸ் மாநிலத்தில் உள்ள மாடமோரோஸ் வழியாக மார்ச் 3 அன்று வெள்ளை நிற மினிவேனில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய குழு அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. பின்னர் அவர்கள் ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் மெக்சிகோ ஜனாதிபதியின் […]

செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோ கடத்தல் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் அமெரிக்கா அதிகாரிகள்

வடக்கு மெக்சிகோவில் நான்கு அமெரிக்க குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, கடத்தப்பட்ட ஆயுததாரிகள், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடுமாறு அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) ஒரு அறிக்கையில், நான்கு அமெரிக்கர்கள் மெக்ஸிகோவின் வடகிழக்கு மாநிலமான தமௌலிபாஸில் உள்ள மாடாமோரோஸுக்கு வெள்ளிக்கிழமை வெள்ளை மினிவேனில் எல்லையைத் தாண்டினர். “மெக்சிகோவைக் கடந்த சிறிது நேரத்தில், அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் வாகனத்தில் இருந்த பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். […]

செய்தி வட அமெரிக்கா

டொராண்டோவில் நபர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு படுகொலை

கனடாவின் – டவுன்டவுன் டொராண்டோவில் ஒரு நபர் கும்பலால் தாக்கப்பட்ட, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். திங்கட்கிழமை நள்ளிரவு 12:50 மணியளவில் குயின் மற்றும் ஷெர்போர்ன் வீதிகளின் சந்திப்புக்கு அவசரக் குழுவினர் அழைக்கப்பட்டனர். அவரது 50 வயதுடைய ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்ததாக துணை மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொராண்டோ பொலிசார் பாதிக்கப்பட்டவர் தப்பியோடிய குழுவினால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதாக நம்புகின்றனர். […]

செய்தி வட அமெரிக்கா

ரஷ்ய-உக்ரைனை அடுத்து வெடிக்கவுள்ள இன்னொரு போர்: பேரிழப்பே மிஞ்சும் என நிபுணர்கள் எச்சரிக்கை

தைவான் மீதான சீனாவின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் நிலையில் தற்போது அமெரிக்கா இல்லை என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் தீவை எந்த விலை கொடுத்தும் தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் காத்திருக்கிறார். மட்டுமின்றி, ராணுவத்தை அனுப்பியேனும் தமது கனவை நிறைவேற்ற அவர் தயாராகி வரும் நிலையில், உக்ரைன் போருக்கு அடுத்து தைவான் மீதான சீனாவின் படையெடுப்பு தொடர்பான தகவல்கள் பீதியை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் தான், சீனாவுக்கு […]

செய்தி தமிழ்நாடு

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு

  • April 11, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு செல்வி தலைமையில் நடைபெற்றது இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில்  மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு  அரசுக்கு அறிக்கை  அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது இதன் […]

செய்தி தமிழ்நாடு

வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

  • April 11, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழாவின் ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்போரூரில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், இக்கோவிலில், கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 25 ம் தேதி, கொடியேற்றத்துடன் […]

செய்தி தமிழ்நாடு

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

  • April 11, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கால்நடை மருத்துவ மனையில்  வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை காஞ்சிபுரம் மண்டலம், செங்கல்பட்டு கோட்டம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2021 – 2022 வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் திருக்கழுக்குன்றத்தில் நடைப்பெற்றது. திருக்கழுக்குன்றம் கால்நடை உதவி மருத்துவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம் எல் ஏவும், திமுக திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ.தமிழ்மணி மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஆகியோர் கலந்து […]

செய்தி வட அமெரிக்கா

மூளையை உண்ணும் அமீபா வைரஸ்; அமெரிக்காவில் ஒருவர் மரணம் !

அமெரிக்காவின் புளோரிடாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மரணம் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மற்றொரு தொற்றுநோயின் அறிகுறியா என்ற அச்சத்தில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.இந்த மரணத்திற்குப் பிறகு புளோரிடா நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் இந்த அமீபா குறித்து போதிய விழிப்புணர்வுடன் இருக்குமாறு நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இறந்தவரின் அடையாளத்தை புளோரிடா சுகாதாரத் துறை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் இந்த மரணம் பிப்ரவரி இறுதியில் நடந்ததாக […]

செய்தி தமிழ்நாடு

திருடர்களின் அட்டகாசம் கோவை மக்கள் பீதி

  • April 11, 2023
  • 0 Comments

கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தனது வேலையை முடித்து விட்டு இரவு தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் காலையில் வந்து பார்த்த பொழுது வாகனம் காணாமல் போயி இருந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் முகேஷ் பட்டேல் புகார் அளித்தார். புகாரின் பேரில்  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை […]