இலங்கை செய்தி

கடவுச்சீட்டு தொடர்பில் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனால் விரைவாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அவர் கோரியுள்ளார். கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்துக்குள் காணாமல் போகுமாயின் அதற்காக 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும், கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்தின் பின்னர் காணாமல் போனால் அதற்காக 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையம் ஊடாக குடிவரவு […]

இலங்கை செய்தி

விமானப்படை “ஹெரலி பெரலி” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  • April 12, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் சென்று  மூன்று மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும்  விமானப்படையின் “ஹெரலி  பெரலி”  வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அநுராதபுரத்திலுள்ள விமானப்படை  முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில்  நேற்று  (01)  ஆரம்பித்து  வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும்  உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ்  முன்னெடுக்கப்படும்  பலா சார்ந்த  உற்பத்திகளுக்கான  உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும்  பலா சார்ந்த உணவு உற்பத்திகளை இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யபடுத்துவதுமே இதன்  நோக்கமாகும். இந்த  வேலைத்திட்டத்தின் கீழ் […]

இலங்கை செய்தி

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று  காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 162,800 ரூபாவாக ஆகக் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 165,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 180,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுன் இப்போது 177,000 ரூபா ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் […]

இலங்கை செய்தி

இரணைதீவு வட்டாரக் கிளைத் தெரிவு, இன நல்லிணக்கத்தின் தொடக்கப் புள்ளி என சிறீதரன் எம்பி தெரிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழ்  அரசுக் கட்சியின் இரணைதீவு வட்டாரக் கிளைக்கான  வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்றைய தினம் (01), பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் அவர்களின் தலைமையில், நாச்சிக்குடாவில் நடைபெற்றுள்ளது. இதன்போது வட்டாரக் கிளையின் புதிய தலைவராக அப்பகுதி முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான திரு.முகமதுமீரா சாய் சலீம் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன நல்லிணக்கத்துக்கான அடையாளமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் […]

இலங்கை செய்தி

நாட்டில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமில்லை – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதியாக தான் இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு அழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் . அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் நேற்று முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை! பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு தண்ணீர் அருந்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ இந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாடசாலைக்கு செல்லும் குழந்தையின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 போத்தல் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வெப்பநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல […]

இலங்கை செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு என்பனவற்றையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதற்காக 135 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை செய்தி

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்தவர்கள் மீது CID விசாரணை நடத்த வேண்டும் – காஞ்சனா

  • April 12, 2023
  • 0 Comments

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி கொலன்னாவ முனையத்தில் எரிபொருள் விநியோகத்திற்கு CPC மற்றும் CPSTL ஊழியர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் CID ஊடாக விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். CPC மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிறுவனங்களின் ஊழியர்கள் குழுவொன்று மார்ச் 28 ஆம் திகதி நண்பகல் எரிபொருள் விநியோக பகுதிக்குள் பலவந்தமாக நுழைந்து அதன் […]

இலங்கை செய்தி

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 28 சீன பிரஜைகள் இலங்கை பொலிசாரால் கைது

  • April 12, 2023
  • 0 Comments

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 28 சீன பிரஜைகளை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களில் ஐந்து சீன பெண்களும் அடங்குவர். கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடம் ஐந்து மடிக்கணினிகள் மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. மோசடி கும்பல் பற்றி INTERPOL ஆல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி, அளுத்கமவில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபர்களை கைது செய்தனர். சந்தேகநபர்கள், சீனாவில் இருந்தபோது, இரண்டு மாதங்களுக்கும் […]

இலங்கை செய்தி

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்து – ரணில்!

  • April 12, 2023
  • 0 Comments

  இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த போட்டியில்  பக்க சார்பின்றி இலங்கை மௌனித்திருக்கும் எனத் தெரிவித்த அவர், வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருப்பதற்கே தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வல்லரசுகளுக்கிடையிலான போட்டி நிலைமை உலகில் எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமையை தோற்விக்குமெனத் தெரியாது. எனவே எதிர்காலத்தில் எமது தடைப்படைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். இதனைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு 2023 என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் […]