இலங்கை செய்தி

இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவராக சனத் ஜயசூரிய நியமனம்

  • April 12, 2023
  • 0 Comments

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டுக்கான (SLC) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார். இதன்படி, குறித்த குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹரூப், அசந்த டி மெல், சரித் சேனாநாயக்க மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

காதல் கோரிக்கையை ஏற்க மறுத்த மாணவி மீது வாள்வெட்டு

  • April 12, 2023
  • 0 Comments

லோயா பிரதேசத்தில் உள்ள ஞாயிறு பாடசாலை ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இன்று (02) காலை 7.45 மணியளவில் விகாரை வளாகத்தினுள் நுழைந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் மாணவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்ஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், […]

இலங்கை செய்தி

கடும் வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

கடும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை இன்றைய நாட்களில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தற்போதைய போன்ற வெப்பமான காலநிமையை கவனத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் செயற்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை செய்தி

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி சிறுபான்மை மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி!

  • April 12, 2023
  • 0 Comments

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது பதற்றநிலை நிலவியுள்ளது.இச் சம்பவம் நேற்றைய தினம் (01) பொன்மாலைக் குடா பகுதியில் இ டம்பெற்றுள்ளது. குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாது காவலுடன் சென்றிருந்த வேலையில் பொது மக்களை மெய்பாதுகாவலன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார்.   புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே […]

இலங்கை செய்தி

பேக்கரி பொருட்களின் விலையும் குறையுமா?

  • April 12, 2023
  • 0 Comments

பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 230 ரூபாயாக ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாயாக குறைந்துள்ள போதிலும் பேக்கரி தொடர்பான உணவுப் பொருட்களின் விலைகளில் குறையவில்லை. இந்நிலையிலேயே விலை குறித்து அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய தயாராகும் அரசு!

  • April 12, 2023
  • 0 Comments

இரண்டு மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய அரசு தயாராகி வருவதாக சுகாதார சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு மருந்துகள் வாங்குவது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். 7000 ரூபாவுக்கு விற்கப்படும் கான்சிக்ளோவியன் என்ற வைரஸ் தடுப்பு மருந்தை 77000 ரூபாவுக்கும்,  200 ரூபா பெறுமதியான லினோசோலிட் என்ற ஆன்டிபயாடிக் மருந்தை 2200 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முயற்சி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களால் நாடு தேவையற்ற […]

இலங்கை செய்தி

அம்பாறையில் மலசல கூட குழியில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தை!

  • April 12, 2023
  • 0 Comments

அம்பாறையில் மலசல கூட குழியில் வீழ்ந்து இரண்டரை வயது ஆண் பிள்ளை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை (01) பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உயிரிழந்த பிள்ளையின் தந்தை வெளிநாடொன்றில் தொழில் புரிந்துவரும் நிலையில் இரு பிள்ளைகளின் தாயும் உயிரிழந்த பிள்ளையும் அயலில் உள்ள உறவினர் வீடொன்று வழமைபோன்று சென்றுள்ளனர். அங்கு அப்பிள்ளையின் தாயார் உறவினர்களுடன் இணைந்து சிறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் யாரும் அவதானிக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளை […]

இலங்கை செய்தி

இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியை சந்தித்தார்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், நேற்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்தனர். இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது மற்றும் பயனுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிவதே பாரத் லாலின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும். மக்கள் சேவைகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை […]

இலங்கை செய்தி

இந்தியா இலங்கை இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி ஆரம்பிக்கவுள்ளது

  • April 12, 2023
  • 0 Comments

SLINEX-2023 இந்தியா இலங்கை  இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி இம்முறை களியாட்டங்களுடன் நடைபெறுகின்றது. கொழும்பில் ஏப்ரல் 3-5 ஆம் திகதிவரை பல இடங்களில் நடைபெறும் கலாசார நிகழ்வுகள்,யோகா அமர்வுகளில் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு எமது நண்பர்கள் அனைவரையும் என இலங்கைக்கான இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,10ஆண்களையும் 5பெண்களையும் உள்ளடக்கிய நீச்சல் அணியினர் தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையான 29 கி.மீ தூரத்தினை 11 மணித்தியாலங்களில் கடந்துள்ளனர். இச்சாதனையுடன் அண்மைய மாதங்களில் இந்நீரிணையினைக் கடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 […]

இலங்கை செய்தி

நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்க மாட்டேன்

  • April 12, 2023
  • 0 Comments

தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும்  மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தாம்  பிரபலமானதை செய்வதற்கு அன்றி சரியானதைச் செய்வதற்காகவே இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பிரபலமான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமே நாட்டுக்கு அழிவு ஏற்பட்டது  எனவும் தெரிவித்தார். முப்படைகளின்  தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (01) அநுராதபுரம் விமானப்படை முகாமில்  இராணுவம், பொலிஸ் மற்றும் ஏனைய படையணிகளை சந்தித்து உரையாற்றும் போதே இதனை […]