ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி
ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று பேர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனையில் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரை சந்தித்தார். உத்தியோகபூர்வ அரசு வரவேற்பு விழாவிற்குப் பிறகு, இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர். “எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது, அத்துடன் தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து […]