இலங்கை செய்தி

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுகிறது

  • April 12, 2023
  • 0 Comments

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு  பரிந்துரைக்கப்பட்ட  கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது. வாகனத்தின் வகை தற்போதைய கோட்டா பரிந்துரைக்கப்பட்ட புதிய கோட்டா THREE WHEEL (Special)  10 […]

இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து 3 இலட்சம் மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக அறிவிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இருந்து 3 இலட்சம் மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான பேராசிரியர் Steve H. Hanke  தெரிவித்துள்ளார். கடந்த  2022 ஆம் ஆண்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக கூறிய அவர், இவர்களில் அதிகமானவர்கள் மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள்  எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு 1884 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்தது போல் அந்நிய செலாவணி சபை நாட்டில் ஸ்தாபிக்கப்பட […]

இலங்கை செய்தி

தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்துவதாக சாணக்கியன் தெரிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை  ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்பிற்கு வந்தபோதும் குசலான மலையில் வைத்து உங்களை தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளை செய்ய முடிகின்றது. இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்வுக்கு பயன்படுத்திய வாக்குச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதிப் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்துகொள்வதற்காக 2022.07.20 ஆம் திகதி நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின்போது உபயோகிக்கப்பட்ட வாக்களிப்புச் சீட்டுக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் இன்று (04) அறிவித்தார். 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 18 ஆம் வாசகத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், 2023.03.24ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவர்களால் […]

இலங்கை செய்தி

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் : புத்தாண்டிற்கு பிறகு தீர்வு?

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெறியாத நபர்களால் கடந்த மாதம் தகர்தெறியப்பட்டது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதிஇ பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இப்பிரச்சினைக்கு புத்தாண்டின் […]

இலங்கை செய்தி

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி!

  • April 12, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி டொலரொன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை விலை 330.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை செய்தி

கேக்கின் விலையும் குறைக்கப்படலாம்!

  • April 12, 2023
  • 0 Comments

புத்தாண்டு காலத்தில் கேக்கின் விலையை குறைப்பது குறித்து அவதானம்  செலுத்தப்பட்டுள்ளது. பேக்கரி தொழிலுக்கு தேவையான முட்டை வரத்து தொடர்ந்தும் சீராக இருந்தால் கேக்கின் விலையை குறைக்க முடியும் என  அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். முன்னதாக கேக் கொள்வனவு குறித்து அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

வெள்ளவத்தையில் ரயில் முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்ட தமிழ் மாணவி!

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலுக்குள் முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். யுவதி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெள்ளவத்தை பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்த யுவதியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி செல்வி சுபகீர்த்தனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்று மாலை 5 மணியளவில் புகையிரதம் மோதுண்டு இறந்துள்ளார்.அதேவேளை உயிரிழந்த மாணவி இம் முறை […]

இலங்கை செய்தி

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  • April 12, 2023
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டும். இந்த மூன்று சட்டமூலங்களையும் ஒன்றாக கொண்டு வரக்கூடாது என நீதி அமைச்சர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்குக் காரணம், […]

இலங்கை செய்தி

நாட்டின் அரச நிதி கடுமையான சரிவைச் சந்தித்திருந்தது

  • April 12, 2023
  • 0 Comments

நாட்டின் அரச நிதி  கடுமையான சரிவைச் சந்தித்திருந்தது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். சில பகுதியினருக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். நாட்டின் அரச நிதி  கடுமையான சரிவைச் சந்தித்திருந்தது. பல தசாப்தகால பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்ற முடியாது. அரச நிதி ஒழுங்குமுறையை கட்டாயம் சரிசெய்ய வேண்டும். வரிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரி அடிப்படையை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்போது ஒரு தற்காலிக பாதிப்பொன்றே ஏற்படுகின்றது. […]