இலங்கை செய்தி

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிகம் சம்பளம்!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தென்கொரியாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய வேலைகளுக்கான இலங்கை இளைஞர்களைத் தெரிவு செய்வது தொடர்பான நேர்முகத் தேர்வுகள் மற்றும் பயிற்சிகளை ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிம் பியோங் போ உள்ளிட்ட குழுவினர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை நேற்று (04) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இதன்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள் எனவும் மேலும் பயிற்சி […]

இலங்கை செய்தி

இந்த வருடத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின்பொருளாதாரம் 2023 இல் வீழ்ச்சியடைந்த பின்னரே மீண்டும் 2024 இல் வளர்ச்சி பாதையைநோக்கி செல்லும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 2022 இல் 7 வீதமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் 3 சதவீத்தினால்  வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது. இலங்கை மீட்சிக்காக நீண்டபாதையில் பயணிக்கவேண்டும் வறியவர்களும் நலிந்தவர்களும் பாதுகாக்கப்படுவது அவசியம் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதி இயக்குநர் உட்சவ் குமார் தெரிவித்துள்ளார்.  

இலங்கை செய்தி

வருமான வரி மூலம் 25 பில்லியன் ரூபாய்களை ஈட்டிய அரசு!

  • April 12, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாள் முற்பண வருமான வரியாக 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஈட்டியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தனியாள் முற்பண வருமான வரியில் 25,577 மில்லியன் வசூலித்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 3106 மில்லியனும்,  பெப்ரவரியில் 10,540 மில்லியனும்,  மார்ச் மாதத்தில் 11,931 மில்லியனும் வரியாக வசூலித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை செய்தி

அமைச்சுப் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள தயார் – ராஜித அறிவிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பண்டாரகம தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  எப்பொழுதும் அரசியல் சார்ந்துதான் முடிவெவு எடுப்பதனால் தான் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் ராஜித சேனாரத்ன கூறினார்.  

இலங்கை செய்தி

அடுத்த வருடத்தின் பிற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்?

  • April 12, 2023
  • 0 Comments

னாதிபதி தேர்தல் அடுத்தவருட பிற்பகுதியில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என தான் கருதுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான எதிர்பார்ப்புகள் வலுத்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலே சிறந்த தீர்வு என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசமைப்பின் அடிப்படையில் தனது முதலாவது பதவிக்காலத்தின் நான்குவருடங்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியால் புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக ஜனாதிபதி தேர்தலிற்கு […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் : வெப்பநிலை அதிகரிக்குமா?

  • April 12, 2023
  • 0 Comments

இன்று முதல் (05) வரும் 15 ஆம் திகதிவரை  சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று  தல்பே,  வலிப்பிட்டிய மற்றும் திஹகொட  ஆகிய பிரதேசங்களில்  நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்மலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த நாட்களில் இலங்கையில் மிதமிஞ்சி வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பேராயர் வலியுறுத்தல்!

  • April 12, 2023
  • 0 Comments

பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்து அந்த சட்ட மூலத்தை தோற்கடிக்கச் செய்ய வேண்டியது பொறுப்புவாய்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பாரிய பொறுப்பாகும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்து  நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான நாடொன்றை கையளிக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரினதும் தார்மீக பொறுப்பாகும். இதற்காக […]

இலங்கை செய்தி

சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் இலங்கைப் பெண்! கணவன் வெளியிட்டுள்ள கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

சவுதி அரேபியாவில் மனித கடத்தலில் சிக்கி வீடு ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கம்பளை நகரில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பளை , பஹல வத்தஹேன, அகுருமுல்ல பகுதியைச் சேர்ந்த அமு ஹெனகெதர சச்சினி மதுஷானி குணசேகர என்ற தனது மனைவியை […]

இலங்கை செய்தி

சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் இலங்கைப் பெண்! கணவன் வெளியிட்டுள்ள கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

சவுதி அரேபியாவில் மனித கடத்தலில் சிக்கி வீடு ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கம்பளை நகரில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பளை , பஹல வத்தஹேன, அகுருமுல்ல பகுதியைச் சேர்ந்த அமு ஹெனகெதர சச்சினி மதுஷானி குணசேகர என்ற தனது மனைவியை […]

இலங்கை செய்தி

இலங்கையில் தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் குறைப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில்இன்று (05) நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேனீர் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதன்படி தேனீர் ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் தேனீர் ஒன்றின் புதிய விலை 90 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அகில இலங்கை […]