இஸ்ரேலின் காசா நகரத் திட்டம் ஆபத்தானது ; ஐ.நா.தலைவர்
காஸா நகரைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் சாடியுள்ளார். இஸ்ரேலின் அந்த முடிவு நிலைமையை மேலும் ஆபத்தாக்கும் என்றும் பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாலஸ்தீன வட்டாரத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காஸா நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதற்கு இஸ்ரேலிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இஸ்ரேல் ஒட்டுமொத்த […]