செய்தி

அமெரிக்​கா​வில் சட்ட​விரோத​மாக​ குடியேறிய 44 பேர் கைது – மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

  • June 8, 2025
  • 0 Comments

அமெரிக்​கா​வில் சட்ட​விரோத​மாக​ குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தும் நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க பொலிஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நகரில் சில […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • June 8, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. காலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 47.76 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 116.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் குழாய் நீர் மூலம் பரவிய அமீபா – மூக்கை கழுவிய பெண் மரணம்

  • June 8, 2025
  • 0 Comments

டெக்சாஸில் குழாய் நீர் மூலம் ஒரு கொடிய அமீபா நோய் பரவியதால் மேலும் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர் சமீபத்தில் குழாய் நீரில் மூக்கைக் கழுவிய பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஒரு முகாம் மைதானத்தில் உள்ள நீர் அமைப்பிலிருந்து குழாய் நீரைப் பயன்படுத்திய பிறகு அவருக்கு இந்த நோய் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அறிகுறிகள் தோன்றிய எட்டு நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்துள்ளார். அரிய அமீபா நோய் மூக்கு வழியாக மட்டுமே மக்களைப் பாதிக்கிறது […]

ஐரோப்பா

உக்ரைனின் ஆபரேஷன் சிலந்தி வலை தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

  • June 8, 2025
  • 0 Comments

உக்ரைன் மேற்கொண்ட ஆபரேஷன் சிலந்தி வலை தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது ரஷ்யா 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசி மிகப் பெரிய தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர். உக்ரைன் கடந்த முதலாம் திகதி ஆபரேஷன் சிலந்தி வலை என்ற பெயரில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தொலை தூர பகுதிக்குள் லாரிகள் மூலம் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டு ரஷ்யாவின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டெலிவரி ஊழியர்களுக்கு அதிர்ச்சி – மனித உருவ ரோபோக்களை களமிறக்கும் அமேசான்

  • June 8, 2025
  • 0 Comments

ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், டெலிவரி ஊழியர்களின் பணிகளில் மனித உருவ ரோபோக்களை களமிறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதனை மேற்கொள்ளும் திறன் கொண்ட மனித உருவ ரோபோக்களுக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கி வருகின்றது. இந்தத் திட்டத்திற்காக, கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது அலுவலகம் ஒன்றில், ‘ஹியூமனாய்டு பார்க்’ என்ற பெயரில் பிரத்யேக சோதனைத் தளம் ஒன்றை அமேசான் அமைத்து வருகிறது. இந்த உட்புற சோதனைத் தளத்தில் பல்வேறு தடைகளை அமைத்து, மனித உருவ ரோபோக்களின் […]

வட அமெரிக்கா

12 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடை – அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த ஈரான்

  • June 8, 2025
  • 0 Comments

ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்த விடயம் அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என ஈரான் விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் கடந்த புதன்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதற்கமைய, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ […]

விளையாட்டு

ரோஹித் – கோலி வேண்டாம்! 4 பேர் RCB அணிக்கு போதும் – விஜய் மல்லையா போடும் திட்டம்

  • June 8, 2025
  • 0 Comments

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த சீசன் எப்போது வரும் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர். இப்படியான சூழலில் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூர் அணிக்கு விராட்- ரோஹித் கூட வேண்டாம் என்பது போல மற்ற 4 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்துகொண்ட விஜய் மல்லையாவிடம் நீங்கள் இந்த […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை!

  • June 8, 2025
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேலும், வடக்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், […]

செய்தி வட அமெரிக்கா

எலான் மஸ்குடன் வெடித்த மோதல் – டெஸ்லா காரை விற்றுவிட டிரம்ப் திட்டம்?

  • June 8, 2025
  • 0 Comments

செல்வந்தர் எலான் மஸ்க் உடனான மோதலைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டெஸ்லா காரை விற்றுவிட முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் டெஸ்லா பங்குகள் சரிந்திருந்தபோது, அந்நிறுவனத்தின் எஸ்-மாடல் காரை பிரபலப்படுத்தும் விதமாக, டிரம்ப் அதனை வாங்கினார். தான் சலுகை பெற்றதாக சர்ச்சை எழுந்துவிடக்கூடாது என்பதற்காக முழு விலை கொடுத்து அதனை வாங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது எலான் மஸ்குடன் வெடித்த மோதலுக்குப் பிறகும் அந்த கார் வெள்ளை மாளிகையில் […]

ஆசியா

சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சிக்கு காரணமாகிய பெண்களின் தீர்மானம்

  • June 8, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், சீன அரசாங்கம் ஒரு குழந்தை கொள்கையை தளர்த்தவும், விவாகரத்துக்கு 30 நாள் கால அவகாசம் வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய மக்கள் காங்கிரஸின் முழுமையான அமர்வு, “காதலை அனுபவிக்க” சீன மக்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க முன்மொழிந்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வுகளில் சமூகவியலாளர் பான் வாங், சீனப் பெண்கள் இப்போது […]

Skip to content