செய்தி தமிழ்நாடு

சோலார் கார் பந்தயம்

  • April 15, 2023
  • 0 Comments

கோவையை அடுத்த மலுமிச்சாம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயம் நடைபெற்றது. சுற்று சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,சோலார் வாகனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கார் பந்தய போட்டியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். இதில்,தமிழகம்,கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 30 அணிகளைச் சார்ந்த 700 வீரர்கள் பங்கேற்றனர்.பொறியியல் துறையின் கல்லூரி மாணவ […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மன் வழங்கிய டேங்கர்கள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வழங்கிய டேங்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது லெப்பர்ட் 2 வகையைச் சேர்ந்த 18  டேங்குகள் வழங்குவதாக ஜெர்மனி உறுதி அளித்திருந்த நிலையில் அதன் ஒரு பகுதி திங்கள் கிழமை பிற்பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார். இந்தவகை டேங்குகளால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்தின் சேலஞ்சர் […]

செய்தி தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தை வீ தமிழ்மணி திறந்து வைத்தார்

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குன்னத்தூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் வாத உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளருமான வீ தமிழ்மணி கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார், இதில் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் மாவட்ட கவுன்சிலர் ஆர் […]

ஐரோப்பா செய்தி

கப்பலில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கி அழிக்க தயாராகும் ரஷ்யா?

  • April 15, 2023
  • 0 Comments

கப்பலில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக ரஷ்யா சோதனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜப்பானிய கடல் எல்லைக்கு வெளியே உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய போர்க் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட மொஸ்கிட் குரூஸ் வகை ஏவுகணைகள் 60 மைல்களுக்கு அப்பால் இருந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.  

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு பெரும் செல்வாக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டின் பின்னர் மிக மோசமாக செல்வாக்கு வீழ்ச்சியினை எதிர்கொண்டுள்ளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தற்போது 28 சதவீத செல்வாக்குடன் உள்ளார். பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2 புள்ளிகள் குறைவாகும். அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் பின்னர் மீண்டும் மிக மோசமாக செல்வாகு வீழ்ச்சியினை சந்தித்துள்ளார். ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி […]

செய்தி தமிழ்நாடு

குருத்தோலை ஞாயிறு பவனி சிலுவை யாத்திரையில் இயேசுநாதர் வேடமடைந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

  • April 15, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் கொள்ள குண்டா பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் குருசேகரம் சார்பில் அருள் திரு ராஜ்குமார் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது இதில் கிறிஸ்துவ ஆலயத்தில் இருந்து பவணியாக புறப்பட்ட திரளான கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் வேடமனிந்து சிலுவையில் அறையப்பட்ட காட்சிகளைக் கொண்டு பவனி தொடங்கியது ஏசுநாதர் ஜெபம் செய்தவாறு பேரணியாக பள்ளிப்பட்டு வரை இந்த பேரணி நடைபெற்றது இதில் திரளான ஆண் பெண் குழந்தைகள் என […]

செய்தி தமிழ்நாடு

குழந்தையை கடத்த முயன்ற வாலிபருக்கு தர்மஅடி

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சோகண்டி ஊராட்சிக்கு உட்பட்ட அடவிளாகம் கிராமத்தில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து, இரு சக்கர வாகனத்தில் கடத்த முயன்ற போது குழந்தை கூச்சலிடவே குழந்தையை விட்டு தப்பி ஓடிய வாலிபரை கிராம மக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்மஅடி கொடுத்தனர், பின்னர் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்போரூர் ஒன்றியத்துக்கு […]

செய்தி தமிழ்நாடு

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர்

  • April 15, 2023
  • 0 Comments

சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் நேற்று இரவு பத்து மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த உயர்நீதி மன்ற வழக்கறிஞரின் மனைவியை பின் தொடர்ந்து மது போதையில் வந்த  தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை   உதவி ஆய்வாளர் சீனிவாச நாயக் (32) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இது குறித்து அப்பெண் கணவரிடம் கூறியதால் சம்பவ இடத்திற்க்கு வந்த கணவர் காவல் துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார், சம்பவ இடத்திற்க்கு போலீசார் வருவதை கண்ட சீனிவாச நாயக் […]

செய்தி தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் வந்த யூடியூபர் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம்

  • April 15, 2023
  • 0 Comments

போரூர் போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி – மவுண்ட் சாலை போரூர் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை மடக்கி அபராதம் விதித்து கொண்டிருந்தனர். அப்போது மொபெட்டில் வந்த தாய், மகன் இருவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்க முயன்றனர். அப்போது மொபெட்டை ஓரம் கட்ட சொல்லும்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலரின் கால் மீது மொபெட்டின் முன்பக்க டயர் ஏறியதில் போக்குவரத்து போலீஸ்காரரின் […]

செய்தி தமிழ்நாடு

பொதுவெளியில் காவலர்களை ஒருமையில் பேசிய பெண்

  • April 15, 2023
  • 0 Comments

திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கத்தில் பொதுவெளியில் காவலர்களை ஒருமையில் பேசிய பெண் ஆய்வாளர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மலை குன்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாக்கம் மலைப்பகுதியில்  கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கடந்த 2014-ல் 33 அடி சிலுவை அமைத்தும், 100 அடி கொடி கம்பம் அமைத்தும்  வழிபாடு செய்து வருகின்றனர். இந்த தேவாயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். […]