செய்தி தமிழ்நாடு

500 கிலோ வரை தயாரிக்கும் திறன் உள்ளது

  • April 15, 2023
  • 0 Comments

கோவை இளம் தலைமுறையினரை கவரும் பிரத்தியேக நகைகளை எமரால்டு ஜுவல்லரி குழுமத்தின் ஓர் அங்கமான ஜுவல் ஒன் கோவையில் அறிமுகம் செய்துள்ளது. கோவையில் எமரால்டு குழுமத்தின் அங்கமான ஜுவல் ஒன் நிறுவனம் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் பிரத்தியேக நகைகளை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் தங்க நகை உற்பத்தியை செய்யும் எமரால்டு ஜுவல்லரி குழுமத்தின் அங்கமான ஜுவல் ஒன் நிறுவனம் இன்று குறைந்த எடையில், அழகிய எலைட் டிசைன்களில், காலத்திற்கேற்ற ட்ரெண்டான கலெக்ஷனில் ஜெ.ஓ என்ற […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு 12.6 பில்லியன் பவுண்டுகள் வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல்!

  • April 15, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 12.6 பில்லியன் பவுண்டுகள் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் வகையில் நிதியை நான்கு ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்தவும், இணக்கம் காணப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஆரம்பித்து ஒருவருடத்தை கடந்துள்ள நிலையில், ஐ.எம்.எஃப் அங்கீகரித்த நிதியின் முதல் தொகுப்பே இதுவாகும்.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்ய டேங்குகளை உக்ரைன் வீரர்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் கிராமப்பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய டேங்குகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. டொனெட்ஸ்க் என்ற கிராமம் வழியாக ரஷ்யாவின் ஐந்து T72 ரக டேங்குகள் நுழைந்து சென்றன. இதனைக் கண்காணித்துக் கொண்டிருந்த உக்ரைன் வீரர்கள் தாங்கள் வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களின் உதவியுடன் ஒவ்வொரு டேங்காக சுட்டு வீழ்த்தினர். இதற்காக அவர்கள் அமெரிக்கா வழங்கிய ஜாவ்லின் ரக ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தனர்.

செய்தி தமிழ்நாடு

இலவசமாக சக்தி வாய்ந்த கண்ணாடியை மேயர் மகாலட்சுமி வழங்கினார்

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக சக்தி வாய்ந்த கண்ணாடியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் வழங்கினர். காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் மற்றும் பம்மல் சங்கர நேத்ராலாயா இணைந்து காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 8 நாட்கள் கண் சிகிச்சை சிறப்பு முகாமை நடத்தினார். இம்முகாமில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கஜேந்திரகுமார் தலைமையிலான […]

செய்தி தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை! Apr 07, 2023 03:00 pm

  • April 15, 2023
  • 0 Comments

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரா, சிறப்பு […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் 4வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் Poissy (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Saint-Sébastien வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்காவது தளத்தில் இருந்து நான்கு வயது சிறுவன் ஒருவன் தவறி கீழே விழுந்துள்ளார். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை. சம்பவத்தின் போது வீட்டில் சிறுவனைத் தவிர வேறு […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பெண்களின் தீர்மானத்தால் அதிர்ச்சி

  • April 15, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் கருச்சிதைவை மேற்கொள்ளும் பெண்களின் தொகை அதிகரித்துச்செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கடந்த ஆண்டு 2022 கருச்சிதைவு செய்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளதாக பிஸ்பாடலின் இருக்கின்ற புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் வரை கருசிதைவு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என தெரியவந்திருக்கின்றது. இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9.9 வீதம் உயர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு 94600 பேர் கருசிதைவை […]

செய்தி தமிழ்நாடு

பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்

  • April 15, 2023
  • 0 Comments

வாலாஜாபாத் ஒன்றியம் பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமோக நெல் விளைச்சல் காரணமாக முன்கூட்டியே நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளான சிட்டியம்பாக்கம், தொடூர், 144 தண்டலம், பரந்தூர், சிறுவாக்கம் ஊராட்சி […]

ஐரோப்பா செய்தி

போப் பிரான்சிஸ் இன்று மருத்துவமனையை விட்டு வெளியேறுவார் – வத்திக்கான்

  • April 15, 2023
  • 0 Comments

போப் பிரான்சிஸ் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. சாண்டா மார்ட்டாவில் உள்ள அவரது வாடிகன் இல்லத்திற்கு அவர் திரும்புவது வெள்ளிக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட இறுதி சோதனைகளின் முடிவுகளைப் பொறுத்தது, என்று கூறியது. மூச்சுத்திணறல் காரணமாக போப் புதன்கிழமை ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது, இருப்பினும் அவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு நன்கு பதிலளித்ததாக வத்திக்கான் கூறியது. ஒரு அறிக்கையின்படி, 86 வயதான போப் […]

ஐரோப்பா செய்தி

புற்றுநோய் மற்றும் நரம்பியல் பிரச்சினைகளால் சிக்கியிருக்கும் புடின்

  • April 15, 2023
  • 0 Comments

விளாடிமிர் புடின் புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதால், முக்கிய சந்திப்புகளின் போது அதிக வேகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய தலைவர் தற்போது புற்றுநோய் மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்காக இஸ்ரேல் மற்றும் சீன மருத்துவர்களிடம் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக அரசியல் ஆய்வாளர் வலேரி சோலோவி குற்றம் சாட்டியுள்ளார். கிரெம்ளின் தலைவரின் உடல்நிலை சரியில்லாதது குறித்த முந்தைய கூற்றுக்கள் மறுக்கப்பட்டன. கணிசமான எடை இழப்புக்கு மத்தியில்  புடின்  மிகவும் வலுவான தூண்டுதல்களை நாடியதாகக் சோலோவி […]