இரத்மலானையில் உணவக உரிமையாளர் குத்திக்கொலை
இரத்மலானை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் கூரிய பொருளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தகராறுக்கு பிறகு இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.