ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மின்சார கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  • May 25, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 03 மாநிலங்களில் உள்ள சுமார் 06 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு ஜூலை 1 ஆம் திகதி முதல் 20 முதல் 25 வீதம் வரை மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என எரிசக்தி ஒழுங்குமுறை நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நியூ சவுத் வேல்ஸ் – குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மின்சார வாடிக்கையாளர்களும் அடங்குவர். விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்கள் இதற்கு உட்பட்டது அல்ல, ஏனெனில் அவற்றின் மின்சார கட்டணம் தனி அமைப்பு […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவன் மரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

  • May 25, 2023
  • 0 Comments

வெல்லவாய வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவராவார். இவர் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ஆசியா

சீனாவின் உள்ளங்கையை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

  • May 25, 2023
  • 0 Comments

சீனாவில் தொழில்நுட்பத் துறை முன்னேற்றம் கட்டணம் செலுத்தும் முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ச்சிங் நகரில் உள்ளங்கையை ‘ஸ்கேன்’ செய்து கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டாசிங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ச்சிங் செல்லும் ரயில் சேவைக்குக் கட்டணம் செலுத்த அதைப் பயன்படுத்தலாம். அதற்கு உள்ளங்கை அடையாள முன்பதிவு அவசியமாகும். ஒருமுறை பதிந்துகொண்டால் போதும். புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. WeChat செயலி மூலம் அதற்கான அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டும். […]

வாழ்வியல்

உடல் எடையை குறைக்கும் கரட் – பயன்படுத்துவது எப்படி?

  • May 25, 2023
  • 0 Comments

கண்களை கவரும் வகையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கரட் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதற்கும் சிறந்த உணவுப் பொருளாகும். அதேபோல் சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. அந்த வகையில் கரட் சாப்பிடுவதால் உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண் பார்வையை பெறுவது வரை ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. கேரட்டில் பொட்டாசியம் வைட்டமின் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் கண் பார்வையை சீராக்குதல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல […]

ஆசியா

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு? – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • May 25, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடிக்காரர்களிடம் 46 பேர் 750,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்திருக்கின்றனர். Shopee இணைய விற்பனைத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி மோசடிக்காரர்கள் Whatsapp அல்லது Telegram மூலமாக முதலில் தகவல் அனுப்புவர். Shopee தளத்தில் தங்களுக்குப் பிடித்த பொருள்களைக் குறிப்பிடும்படி அவர்கள் கேட்பர். பிறகு ஆய்வில் பங்கேற்றால் ஒரு சிறிய தொகையைக் கொடுப்பதாகக் கூறுவர். ஆய்வில் பங்கேற்றதும். அதிகப் பணம் கிடைக்கும் உதவியாளர் வேலைக்கு வரும்படி அழைப்பு […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஜப்பான் செய்த மிகப்பெரிய உதவி!

  • May 25, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு 100 ராணுவ வாகனங்களை வழங்கி ஜப்பான் உதவி செய்துள்ளது. ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்துவரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நடைபெற்ற ஜி7 மாநாட்டில் உக்ரைனுக்கு உதவுவதாக ஜப்பான் உறுதியளித்திருந்தது. அதன்படி, மூன்று வகையான வாகனங்களை பட்டியலிடும் ஆவணத்தை உக்ரேனிய தூதர் செர்ஜி கோர்சுன்ஸ்கியிடம் வழங்கினார். அதன்படி, சுமார் 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஜப்பான் […]

ஐரோப்பா

ரஷ்யாவிலிருந்து வெளியேறும் மிகவும் பிரபலமான நிறுவனம்

  • May 25, 2023
  • 0 Comments

ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேற ஜப்பானின் Uniqlo நிறுவனம் முடிவெடுத்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் Uniqlo ரஷ்யாவில் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது. சந்தையிலிருந்து நிரந்தரமாக வெளியேற அது முடிவெடுத்திருப்பதாக ரஷ்யாவின் தொழில், வர்த்தகத் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் Uniqlo நிறுவனம் இன்னும் அதற்கான விண்ணப்பத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவில்லை. ரஷ்யாவில் அதை வாங்க இன்னும் யாரும் முன்வரவில்லை என்பதை அது குறிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். அது குறித்து Uniqlo உடனடியாக […]

ஐரோப்பா

பிரான்ஸ் மருத்துவமனையில் மோதல் – பரிதாபமாக உயிரிழந்த செவிலியர்

  • May 25, 2023
  • 0 Comments

பிரான்ஸ் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனை ஒன்றில் இருவருக்கிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றில் செவிலியரே கொல்லப்பட்டுள்ளார். திங்கட்கிழமை இரவு Reims பல்கலைக்கழக மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் மேலாளர் ஒருவருக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதன்போது செல்வியரை மேலாளர் கத்தி மூலம் தாக்கியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான செவிலியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். தாக்குதல் நடத்திய மேலாளர் முதலில் சம்பவ […]

இலங்கை

இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • May 25, 2023
  • 0 Comments

இலங்கையில் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான மற்றும் அவசியமான பல பொருட்களுக்கே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை குறித்த விவாதத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 அல்லது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி – வீதியில் நேர்ந்த கதி

  • May 25, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சிறுமி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்சன் மாநிலத்தில் முக்காடு அணிந்து சென்ற சிறுமிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முக்காடு அணிந்து செல்லும் பெண்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் நடந்து வருகின்றது இந்நிலையில் அண்மை காலத்தில் ஜெர்மனியின் சக்சன் மாநிலத்தில் முக்காடு அணிந்து சென்ற சிறுமி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை பெண்ணெருவர் தாக்கியுள்ளதாக தெரியவந்திருக்கிறது. அதாவது முக்காடு அணிந்த நிலையில் சிறுமியானவர் தனது வீட்டுக்கு சென்று […]