செய்தி தமிழ்நாடு

தனியார் ஹோட்டலில் தீ விபத்து

  • May 25, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள செங்கழுநீர் ஓடை வீதியில் மைசூர் ஆரிய பவன் எனும் பெயரில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதியில் எப்போதும் அதிக கூட்டத்துடன் காணப்படும் இந்த உணவகத்தில் திடீரென சமையல் கட்டில் படிந்திருந்த எண்ணெய் கரைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கி உள்ளது. தீப்பற்றி எரிவது குறித்து உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் சமயோகிதமாக செயல்பட்டு […]

செய்தி தமிழ்நாடு

மருந்துகள் இல்லை என திருப்பி அனுப்பப்படும் அவல நிலை

  • May 25, 2023
  • 0 Comments

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்திலே அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டு வரும் முக்கிய இடமாக கருத்தப்படுகிறது. சூளகிரியில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பொதுமக்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 2021 ஆண்டு 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விபத்தில் காயம் அடைந்தவர்கள், மற்றும் தற்க்கொலைக்கு முயற்சி செய்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு இந்த மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் […]

இலங்கை

தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

  • May 25, 2023
  • 0 Comments

முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், விசேட பொலிஸ் பாதுகாப்பில் இன்று தோண்டி எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் […]

செய்தி தமிழ்நாடு

அரசு மதுபான கடையில் இரண்டாயிரம் ரூபாய் வாங்க மறுப்பு

  • May 25, 2023
  • 0 Comments

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டு செல்லும் சாலையில் கடை எண் 9222 அரசு மதுபானக்கடை இயங்கி வருகின்றது. கடந்த 19 ஆம் தேதி இரண்டாயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து நிறுத்தப்படுவதாகவும் மே 23ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் வங்கிகளில் நாள் ஒன்றிற்கு 20,ஆயிரம் ரூபாய் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அனைத்து விற்பனை நிலையங்கள் பெட்ரோல் பங்குகள் சூப்பர் மார்க்கெட் வணிக வளாகங்கள் அரசு பேருந்து அரசு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மின்சார கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  • May 25, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 03 மாநிலங்களில் உள்ள சுமார் 06 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு ஜூலை 1 ஆம் திகதி முதல் 20 முதல் 25 வீதம் வரை மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என எரிசக்தி ஒழுங்குமுறை நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நியூ சவுத் வேல்ஸ் – குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மின்சார வாடிக்கையாளர்களும் அடங்குவர். விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்கள் இதற்கு உட்பட்டது அல்ல, ஏனெனில் அவற்றின் மின்சார கட்டணம் தனி அமைப்பு […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவன் மரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

  • May 25, 2023
  • 0 Comments

வெல்லவாய வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பாடசாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 16 வயதுடைய பாடசாலை மாணவராவார். இவர் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ஆசியா

சீனாவின் உள்ளங்கையை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

  • May 25, 2023
  • 0 Comments

சீனாவில் தொழில்நுட்பத் துறை முன்னேற்றம் கட்டணம் செலுத்தும் முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ச்சிங் நகரில் உள்ளங்கையை ‘ஸ்கேன்’ செய்து கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டாசிங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ச்சிங் செல்லும் ரயில் சேவைக்குக் கட்டணம் செலுத்த அதைப் பயன்படுத்தலாம். அதற்கு உள்ளங்கை அடையாள முன்பதிவு அவசியமாகும். ஒருமுறை பதிந்துகொண்டால் போதும். புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. WeChat செயலி மூலம் அதற்கான அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டும். […]

வாழ்வியல்

உடல் எடையை குறைக்கும் கரட் – பயன்படுத்துவது எப்படி?

  • May 25, 2023
  • 0 Comments

கண்களை கவரும் வகையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கரட் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதற்கும் சிறந்த உணவுப் பொருளாகும். அதேபோல் சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. அந்த வகையில் கரட் சாப்பிடுவதால் உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண் பார்வையை பெறுவது வரை ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. கேரட்டில் பொட்டாசியம் வைட்டமின் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் கண் பார்வையை சீராக்குதல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல […]

ஆசியா

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு? – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • May 25, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடிக்காரர்களிடம் 46 பேர் 750,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்திருக்கின்றனர். Shopee இணைய விற்பனைத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி மோசடிக்காரர்கள் Whatsapp அல்லது Telegram மூலமாக முதலில் தகவல் அனுப்புவர். Shopee தளத்தில் தங்களுக்குப் பிடித்த பொருள்களைக் குறிப்பிடும்படி அவர்கள் கேட்பர். பிறகு ஆய்வில் பங்கேற்றால் ஒரு சிறிய தொகையைக் கொடுப்பதாகக் கூறுவர். ஆய்வில் பங்கேற்றதும். அதிகப் பணம் கிடைக்கும் உதவியாளர் வேலைக்கு வரும்படி அழைப்பு […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு ஜப்பான் செய்த மிகப்பெரிய உதவி!

  • May 25, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு 100 ராணுவ வாகனங்களை வழங்கி ஜப்பான் உதவி செய்துள்ளது. ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்துவரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நடைபெற்ற ஜி7 மாநாட்டில் உக்ரைனுக்கு உதவுவதாக ஜப்பான் உறுதியளித்திருந்தது. அதன்படி, மூன்று வகையான வாகனங்களை பட்டியலிடும் ஆவணத்தை உக்ரேனிய தூதர் செர்ஜி கோர்சுன்ஸ்கியிடம் வழங்கினார். அதன்படி, சுமார் 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஜப்பான் […]