இலங்கை

இராணுவத்தினர் கடமைக்கு இடையூறு : யாழில் இருவர் கைது!

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி , இராணுவத்தினரை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். அது தொடர்பில் இராணுவத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் […]

இலங்கை

தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்; சாணக்கியன் அதிரடி !

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்; “ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் கூறிக் கொள்வது ஒன்று தான், உடனடியாக தேர்தலை நடாத்துங்கள்.பொய்யான சாக்குப்போக்கு காரணங்களை காட்டி எம்மை ஏமாற்ற நினைக்காதீர்கள். தேர்தலை நடத்தாவிட்டால் வடக்கு, கிழக்கின் பலத்தைக் காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் […]

இலங்கை

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

  • April 10, 2023
  • 0 Comments

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கைது, நாட்டில் விலைவாசியேற்றம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் […]

இலங்கை

கனடா வேலை வாய்ப்பு; விசா மோசடியில் சிக்கிய பிரதேச சபை உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!

  • April 10, 2023
  • 0 Comments

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் வதிவிட விசாக்களை பெற்று தருவதாக உறுதியளித்து நபர்களிடமிருந்து 5 – 20 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேக நபருக்கு பணம் செலுத்திய 25 பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபருக்கு […]

இலங்கை

ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • April 10, 2023
  • 0 Comments

பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை

இலங்கையின் வரிக்கொள்கை தொடர்பில் வெளியான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாத விடயம் என சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வரி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யவே அது தேவைப்படுவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது. தனிநபர் வருமான வரிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரி விகிதம் அதை அடைவதற்கு இன்றியமையாதது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஊடாக கடனாளிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை

யாழில் பெண் ஒருவரின் மோசமான செயல்

  • April 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் உரும்பிராய், பொக்கனைப் பகுதியில் பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவரது உடைமையில் இருந்து 6 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணை கைது செய்ததுடன் கசிப்பினையும் மீட்டுள்ளனர். அதேவேளை குறித்த பெண் ஏற்கனவே பல தடவைகள் கைது செய்யப்பட்டு […]

இலங்கை

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 24 மணிநேர  நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு 1-4 மற்றும் கொழும்பு 7-11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். கடுவெல மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொலன்னாவ நகர சபை பகுதி, வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என […]

இலங்கை

வெளிநாடுகளில் தொழில் செய்ய தயாராகும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையர்கள் வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்லும் போது உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 ஜனவரி மாதத்தில் 24,236 இலங்கையர்கள் வெளிநாட்டு […]

இலங்கை

இலங்கையில் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்காக அறிமுகமாகும் நடைமுறை

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார். பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை பெற்றுக்கொடுக்க அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொழில் தகுதியுடையவர்களாக பிள்ளைகளை மாற்ற வேண்டுமாயின் முதலில் பெற்றோரிடத்தில் மாற்றம் வரவேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

You cannot copy content of this page

Skip to content