இலங்கை விமான நிலையங்களில் அரசியல்வாதிகளின் சலுகைகள் நீக்குமாறு கோரிக்கை
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த அமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், இது களவு மற்றும் மோசடிக்கு சமமானதாகும். அலி சப்ரி ரஹீமின்பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதற்கு நான் ஆதரவளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள் நீக்கப்பட வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண பயணிகள் முனையம் […]