ஜனாதிபதியின் செயலாளர் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் கைது
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபரை பின்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறை பின்வத்தையில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் சந்தேகநபர் நுழைய முயன்றுள்ளார். அந்த நபர் இன்று (30) மதியம் 12.30 மணியளவில் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். சந்தேக நபர் சுவரில் இருந்து குதித்து தோட்டத்திற்குள் நுழைந்த விதத்தை வீட்டின் பாதுகாப்பிற்காக காத்திருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரைப் பிடிக்கச் சென்றபோது, […]