இலங்கை செய்தி

பருத்தித்துறை பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்!

  • April 11, 2023
  • 0 Comments

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த வன்முறை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் யார் என இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக […]

இலங்கை செய்தி

உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது – மாவை சேனாதிராசா!

  • April 11, 2023
  • 0 Comments

வெளிநாட்டு மீனவர்கள் எந்த எல்லையில் மீன் பிடிக்கலாம் என்பது சரியான முறையில்  அடையாளப்படுத்தப்பட வேண்டும். மேலும், உள்ளூர் கடலில் வெளிநாட்டவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பது தொடர்பாக கேட்டபோது இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், இலங்கை, இந்திய மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கென கடற்பரப்பில் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் நின்று யாரும் மீன்பிடி தொழிலை செய்ய […]

செய்தி

புதையல் தோன்ற முற்பட்ட எழுவர் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

குருநாகல்  நாகொல்லாகம பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மஹவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக  நாகொல்லாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில்  குறித்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது  மூலம் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கையர் அனைவர்க்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள மலேசிய அரசாங்கம்!

  • April 11, 2023
  • 0 Comments

மலேசிய அரசாங்கம் , இலங்கைக்கு கூடுதலாக 10,000 வேலை வாய்ப்புகளை ஒதுக்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 10,000 வேலை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்தப் புதிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அண்மைய வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவிதற்கு GMOA தீர்மானம்!

  • April 11, 2023
  • 0 Comments

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கை, ஊதிய உயர்வு என பல்வேறு காரணிகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,  பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக  கைவிடுவதற்கு  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (16)  காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் தொழில் வல்லுநர்கள் சங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

மடகஸ்கரில் இருந்து இலங்கை அழைத்துவரப்பட்ட கடத்தல்காரன்!

  • April 11, 2023
  • 0 Comments

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றது. கடத்தல்காரகள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். “ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோருடன் மேலும் ஆறு பேர் கடந்த 7ஆம் திகதி […]

இலங்கை செய்தி

இன்று ஓய்வு பெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ரயில்வே திணைக்களம்!

  • April 11, 2023
  • 0 Comments

நாடாளாவிய ரீதியில் இன்று பல தொழிற்சங்கள் போராட்டத்தை முன்னுஎடுத்துள்ள நிலையில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை , 10 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம் இடம்பெறுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான […]

இலங்கை செய்தி

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்களை அழைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் தரப்பின் 14 உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் முத்துறைகளுக்கும் இடையில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் ;இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடந்த […]

இந்தியா செய்தி

இலங்கைக்கு கடன் உத்தரவாதத்தை வழங்கிய நான்கு நாடுகள்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை தொடர்பில் மேலும் நான்கு நாடுகள் சர்வதேச நாணயநிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளjதாக  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா பாக்கிஸ்தான் ஹங்கேரி குவைத் ஆகிய நாடுகள் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

நாமல் ஒரு புரொய்லர் கோழி; விமல் வீரவன்ஸ கடும் விமர்சனம்!

  • April 11, 2023
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது விமல் வீரவன்ச மேலும் கூறுகையில்,மக்கள் துன்பப்படும் வேளையில் பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் ராஜபக்ஷ கிரிக்கட் விளையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், நாமல் ராஜபக்ச  ரணிலைப் போன்று செயற்படுவது மாத்திரமின்றி […]

You cannot copy content of this page

Skip to content