ஜெர்மனியில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் புதிய அரசாங்கம்
ஜெர்மனியில் பொறுப்பேற்கவிருக்கும் புதிய அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளது. சான்ஸ்லர் பதவிக்கு வரவிருக்கும் Freidrich Merz சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் அவரது பழைமைவாதக் கட்சி அதிக வாக்குகளோடு முதலிடத்தைப் பிடித்தது. அது சமூக ஜனநாயகக் கட்சியோடு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, பொருளாதாரத்தை வளர்க்கவும், தற்காப்புச் செலவைக் கூட்டவும் அவசர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.