இலங்கை செய்தி

யாழில் ஆசிர்வாத வழிபாடுகளை நடத்திய பிரபல பாதிரியார் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்

  • April 11, 2023
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணப் பகுதியில் “ஆசிர்வாத வழிபாடுகளை” நடத்தத் தயாரான பாதிரியார் மற்றும் அவரது குடும்பத்தினர் நால்வரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களுக்கு எதிராக யாழ்.பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் தினகரன் என்ற இந்த பாதிரியார் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 15 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ளார். […]

இலங்கை செய்தி

திடீரென பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் – கிழக்கு இலங்கையில் சம்பவம்

  • April 11, 2023
  • 0 Comments

ஏறாவூர் கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து நாசமானது. இந்த சம்பவம் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருளை நிரப்பிக்கொண்டு பம்ப் அருகே சில மீட்டர்கள் சென்றபோது மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதியில் இருந்து தீ பரவியது. தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வெளியே குதித்து உயிரை காப்பாற்றினர். எரிபொருள் நிரப்பு நிலையத்தின் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் கார் மோதி கட்டிடமே நொறுங்கிய விபத்து – அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவில் காரை திருடிச் சென்ற நபர்களை பொலிஸார் விரட்டிச் செல்லும்போது, இடம்பெற்ற விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் குறுக்கே வந்த ஒரு கார் மீது மோதி, அருகே இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கார் திருட்டு மற்றும் திருடர்களின் காரை அதிவேகமாக பொலிஸார் […]

இலங்கை செய்தி

வரும் திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம்

  • April 11, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான  முதலாம் தவணை எதிவரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கு மேல் பாடசாலைக்கு மாணவர்கள் வர முடியாததால் காரணத்தால் இந்த வருடத்தில் அதிக விடுமுறை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். பாடசாலைகளில் முதலாம் தவணை பொதுவாக ஜனவரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கொரோனா காரணமாக தாமதமான கால அட்டவணையை தாங்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையின் அடுத்தக் கட்டம் நெருக்கடியாக இருக்கும் என எச்சரிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்து விட்டதாக தெரிவித்து மகிழ்ச்சியை சிலர் வெளிப்படுத்தினாலும் அடுத்த கட்டம் கடினமானதாகவே இருக்கும்  என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை இணங்கியுள்ளதற்கு அமையவே சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கியுள்ளது.  அந்த நிபந்தனைகளை நிறைவு செய்யாமல் விடும் பட்சத்தில் அடுத்த கட்டம் சிரமமமானதாகவே அமையும். அடுத்தக் கட்டத்தில் நிதி கிடைக்காமலும் போகலாம் என்றும் அவர் […]

இலங்கை செய்தி

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்குமறியல் நீடிப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்குமறியளில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர். […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் ஒருவர் இறந்தார்

கனடாவில் இடம்பெற்ற விபத்தல் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுஞ்சாலை 401 மற்றும் போர்ட் யூனியன் வீதியில் ஏற்பட்ட விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய விரைவுப் பாதையில் சனிக்கிழமை காலை சுமார் 9:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்கள் சிக்கின. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் உருளத் தொடங்கிய போது, நெடுஞ்சாலையின் பனி மூடிய வலது பாதையில் கார் ஒன்று நுழைந்ததாக மாகாண காவல்துறை கூறுகிறது. மூன்று வழிச்சாலைக்கு நடுவில் வந்து நிற்கும் முன், கார் […]

இலங்கை செய்தி

டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை அல்லிராஜாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதை அரசாங்கம் பெருமையாக கொள்கிறது, அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். கடன் பெற்றதை கொண்டாட வேண்டுமாயின் […]

இலங்கை செய்தி

மாணவர்களை பரீட்சைக்கு அனுமதிக்காதமை தொடர்பில் விசாரணை!

  • April 11, 2023
  • 0 Comments

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி  பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் அவர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பாடசாலை அதிபர்  பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்தனர். […]

இலங்கை செய்தி

தேர்தலுக்கான நிதி தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (24) தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில்  வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது, நீதிமன்றம், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் அரசாங்கம் அதனை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.மேலும், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை எப்போது விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள சுமார் மூன்றாயிரம் அரச பணியாளர்களுக்கு இரண்டு மாத […]

You cannot copy content of this page

Skip to content