இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 1,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் விலை 157,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 171,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.