ஒடிசா ரயில் விபத்து – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர்
ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மை காரணம் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில் 261 பேர் பலி மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் மீட்புப்பணிகள் குறித்தும் அதற்கான […]