செய்தி தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியான இந்திரா காந்தி சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு பொதுமக்கள் தண்ணீர் தாகம் தனிய மாநகரப் பகுதி செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம் தலைமையில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். இவற்றில் இளநீர், தர்பூசணி, […]

செய்தி தமிழ்நாடு

வீடு முழுவதும் விருதுகள்

  • April 15, 2023
  • 0 Comments

வீடு முழுவதும் கோப்பைகள்,விருதுகள்,சான்றிதழ்கள்…கோவையை சேர்ந்த கின்னஸ் சாதனை குடும்பம். கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒண்பதாம் வகுப்பு மாணவி   உட்பட மூன்று  பேர் யோகாவில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகள் செய்து அசத்தியுள்ளனர். பள்ளி மாணவ,மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் யோகா கலையில் வயது வித்தியாசமின்றி பலரும் சாதனையாளர்களாக மாறி வருகின்றனர்.அந்த வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ,ரூபிகாவின் மகள் பவ்ய ஸ்ரீ,மகன் பூவேஷ். குடும்ப சூழ்நிலை காரணமாக கணவரிடம் விவாகரத்து […]

ஐரோப்பா செய்தி

போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யா போர்முனைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரிக்கும் என பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். ஆயுத தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார். மொஸ்கோவில் உள்ள ரஷ்யப் படைகளின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். ஸ இதேவேளை வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான ஷோய்கு முன்வரிசைக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் பிரித்தானிய பயணிகள்!

  • April 15, 2023
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற பிரித்தானிய பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள டோவர் துறைமுகம், மோசமான வானிலை, அதிக போக்குவரத்து மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளின் செயலாக்க தாமதம் ஆகியவற்றால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறியுள்ள நிலையில், இவ்வாறான தாமதங்களால் மக்கள் விரிக்தியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பா செய்தி

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ரஷ்ய ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி ஐ.நா பாதுகாப்பு சபையின் அடுத்த மாதத்திற்கான கூட்டங்களுக்கு ரஷ்யா தலைமை தாங்கவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பீ, தவறான தகவல்களை பரப்புவதற்கு ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்வதாகவும், உக்ரைனில் அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகவும் கூறினார். துரதிஷ்ட வசமாக ரஷய் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ளது எனத் தெரிவித்த அவர், யதார்த்தத்தை மாற்றுவதற்கு ஏதுவான சட்டப்பாதை இல்லை […]

செய்தி தமிழ்நாடு

500 கிலோ வரை தயாரிக்கும் திறன் உள்ளது

  • April 15, 2023
  • 0 Comments

கோவை இளம் தலைமுறையினரை கவரும் பிரத்தியேக நகைகளை எமரால்டு ஜுவல்லரி குழுமத்தின் ஓர் அங்கமான ஜுவல் ஒன் கோவையில் அறிமுகம் செய்துள்ளது. கோவையில் எமரால்டு குழுமத்தின் அங்கமான ஜுவல் ஒன் நிறுவனம் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் பிரத்தியேக நகைகளை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் தங்க நகை உற்பத்தியை செய்யும் எமரால்டு ஜுவல்லரி குழுமத்தின் அங்கமான ஜுவல் ஒன் நிறுவனம் இன்று குறைந்த எடையில், அழகிய எலைட் டிசைன்களில், காலத்திற்கேற்ற ட்ரெண்டான கலெக்ஷனில் ஜெ.ஓ என்ற […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு 12.6 பில்லியன் பவுண்டுகள் வழங்க ஐ.எம்.எஃப் ஒப்புதல்!

  • April 15, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 12.6 பில்லியன் பவுண்டுகள் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் வகையில் நிதியை நான்கு ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்தவும், இணக்கம் காணப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஆரம்பித்து ஒருவருடத்தை கடந்துள்ள நிலையில், ஐ.எம்.எஃப் அங்கீகரித்த நிதியின் முதல் தொகுப்பே இதுவாகும்.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்ய டேங்குகளை உக்ரைன் வீரர்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் கிராமப்பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய டேங்குகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. டொனெட்ஸ்க் என்ற கிராமம் வழியாக ரஷ்யாவின் ஐந்து T72 ரக டேங்குகள் நுழைந்து சென்றன. இதனைக் கண்காணித்துக் கொண்டிருந்த உக்ரைன் வீரர்கள் தாங்கள் வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களின் உதவியுடன் ஒவ்வொரு டேங்காக சுட்டு வீழ்த்தினர். இதற்காக அவர்கள் அமெரிக்கா வழங்கிய ஜாவ்லின் ரக ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தனர்.

செய்தி தமிழ்நாடு

இலவசமாக சக்தி வாய்ந்த கண்ணாடியை மேயர் மகாலட்சுமி வழங்கினார்

  • April 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக சக்தி வாய்ந்த கண்ணாடியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் வழங்கினர். காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி கிளப் மற்றும் பம்மல் சங்கர நேத்ராலாயா இணைந்து காஞ்சிபுரம் ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலை பள்ளி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 8 நாட்கள் கண் சிகிச்சை சிறப்பு முகாமை நடத்தினார். இம்முகாமில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கஜேந்திரகுமார் தலைமையிலான […]

செய்தி தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை! Apr 07, 2023 03:00 pm

  • April 15, 2023
  • 0 Comments

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரா, சிறப்பு […]

You cannot copy content of this page

Skip to content