ஐரோப்பா செய்தி

பொஸ்னியாவில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 13 வயது சிறுவன் கைது

  • June 14, 2023
  • 0 Comments

பொஸ்னியாவில் ஆரம்பப் பள்ளி கட்டிடத்திற்குள் ஆசிரியர் ஒருவரை சுட்டுக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு நகரத்தில் உள்ள லுகாவாக் தொடக்கப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய 38 வயதுடைய ஆசிரியை, பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக ஒரு அறிக்கையில் போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்டவர் இஸ்மெட் ஒஸ்மானோவிக் என அடையாளம் […]

உலகம்

ஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல்

ஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென் ஒன்றாரியோவின் சட்பரி பகுதியின் கார்சன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கத்தி குத்துச் சம்பவத்தில் 17 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி 17 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான். இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இவ்வாறு கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கத்தி குத்து […]

பொழுதுபோக்கு

சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய  தகவல் வெளியாகியுள்ளது இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. . ‘கங்குவா’ […]

இலங்கை செய்தி

பாதாள உலக பிரமுகர் “பூரு மூனா” விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

  • June 14, 2023
  • 0 Comments

இவ்வருட முற்பகுதியில் விமான நிலையத்தில் வைத்து படுமோசமான சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட பிரபல குற்றப் பிரமுகர் ரவிந்து சங்க டி சில்வா என்ற “பூரு மூனா” ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 2022 டிசம்பர் 18 அன்று ஹன்வெல்லவில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட “போரு மூனா”, மேலும் பல கொலைகளில் துப்பாக்கிதாரியாக இருந்ததாக நம்பப்படுகிறது. பெப்ரவரி 24 அன்று, […]

செய்தி வட அமெரிக்கா

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிளிங்கனின் சீனப் பயணத்தை உறுதிப்படுத்திய அமெரிக்கா

  • June 14, 2023
  • 0 Comments

இரண்டு வல்லரசுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக பெப்ரவரியில் ஒத்திவைக்கப்பட்ட நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பயணம், இந்த வாரம் உயர்மட்ட இராஜதந்திரி Antony Blinken சீனாவிற்கு விஜயம் செய்வார் என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் 16 முதல் 21 வரையிலான பயணத்தில் சீனாவுக்குச் செல்லும் மிக உயர்ந்த தரவரிசை பைடன் நிர்வாகமாக பிளிங்கன் மாறும், மேலும் லண்டன் பயணமும் அடங்கும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே “திறந்த தகவல்தொடர்புகளை பராமரிப்பதன் முக்கியத்துவம்” பற்றி […]

இலங்கை

காஞ்சன விஜேசேகர வெளியிட்ட தகவல்

அடுத்த வருடம் (2024) டிசெம்பர் மாதத்திற்குள் மன்னார் மற்றும் பூனாரில் உத்தேச 500 மெகாவாட் சூரிய மற்றும் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை நிறைவு செய்ய குறித்த நிறுவனம் எதிர்பாத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனில் சர்தானா உள்ளிட்ட அதிகாரிகளுடன், திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பணிகள் தொடங்குவது தொடர்பிலும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் கட்டுமான நேரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலிய செனெட்டருக்கு எதிராக பெண் செனெட்டர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு

அவுஸ்திரேலிய லிபரல்கட்சியின் செனெட்டர் டேவிட் வன் தன்னை செனெட்டில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினார் என செனெட்டர் லிடியா தோர்ப் குற்றம்சாட்டியுள்ளார். செனெட்டர் வன் வன்முறைகள் குறித்து உரையாற்றி;க்கொண்டிருந்த லிடியா தோர்ப் அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். குற்றமிழைத்த ஒருவர் வன்முறை குறித்து பேசுவது எனக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்துகின்றது இந்த நபர் என்னை துன்புறுத்தியுள்ளார் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார் என லிடியா தோர்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் அவரை நீக்கவேண்டும்,இவர் இவ்வகையான வன்முறைகள் குறித்து பேசுவது மிகவும் அவமானகரமான விடயம் […]

செய்தி

ஒரு மாம்பழம் கைல கிடைச்சதுக்கு இப்படியா? வைரலாகும் கீர்த்தி சுரேஷின் செயல்

  • June 14, 2023
  • 0 Comments

அனைத்து மொழிகளிலும் பிசியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பண்டூரி மாம்பழத்தை சாப்பிடும் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதுமே தனது குறும்புத் தனங்களை இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார். நாய்க்குட்டியுடன் கொஞ்சுவது, காற்றாடி விடுவது, வீணை வாசிப்பது யோகா செய்வது என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மாம்பழம் ஒன்றை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். பண்டூரி மாம்பழம் சாப்பிடும் போது […]

இலங்கை

கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1,506 ரூபாவாக காணப்பட்டதுடன் கடந்த மே மாதம் கோழி இறைச்சி 1,396 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பொழுதுபோக்கு

அமித்ஷாவை சந்தித்த ஜி.வி.பிரகாஷ் : ஒருவேளை அரசியலில் பிரவேசிக்க போகிறாரா?

  • June 14, 2023
  • 0 Comments

பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் விதமாக அந்த கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதில் தமிழ்நாட்டிற்கும் வருகை தந்திருந்தார். அவரின் வருகையின்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான பிரபலங்கள் அவரின் அழைப்பை நிராகரித்திருந்தனர். இருப்பினம் இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் மாத்திரம் அவரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார். இதுதான் தற்போது வைரலாக […]