இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

ட்ரம்ப் விதித்த அதிரடி தடை – 41 நாட்டு பிரஜைகள் பயணம் செய்வதில் சிக்கல்

  • March 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக கடுமையாக செயற்பட்டு வரும் நிலையில் பல நாடுகளுக்கு உள்வருகை தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. . இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் , பெலாரஸ் ,பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,இந்த நாடுகளை மூன்று […]

உலகம்

ஈராக், சிரியாவின் ஐ.எஸ் தலைவர் தலைவர் கொலை

  • March 15, 2025
  • 0 Comments

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் ஸ்டேட் தலைவர் அபு கதீஜா எனும் அப்துல்லா மக்கி மொஸ்லே அல்-ரிஃபாய் கொல்லப்பட்டதாக ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இருள் மற்றும் பயங்கரவாதத்தின் சக்திகளுக்கு எதிராக ஈராக்கியர்கள் தங்கள் அற்புதமான வெற்றிகளைத் தொடர்கின்றனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் “துணை கலீஃபா”-வும், உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதிகளில் ஒருவருமான அபு கதீஜா என்றழைக்கப்படும் அப்துல்லா மக்கி மொஸ்லே அல்-ரிஃபாய் கொல்லப்பட்டார் என […]

பொழுதுபோக்கு

32 வயதாகும் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்து தகவல்

  • March 15, 2025
  • 0 Comments

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட்டின் சொத்து மதிப்பு குறித்து சில செய்திகள் வெளிவந்துள்ளன. மகேஷ் பட் – Soni Razdan தம்பதிக்கு பிறந்த இவர் தனது 19 வயதில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தொடர்ந்து ரசிகர்ளை கவரும் வகையில் நடித்து வந்த ஆலியா பட் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். இன்று […]

ஐரோப்பா

உக்ரைனில் அமைதி காக்கும் ஒப்பந்தம் தொடர்பில் விவாதிக்க ஸ்டாமர் தலைமையில் கூடும் தலைவர்கள்!

  • March 15, 2025
  • 0 Comments

உக்ரைனில் அமைதி காத்தல் குறித்து விவாதிக்க சர் கீர் ஸ்டார்மர் இன்று (15.03) உலகத் தலைவர்களின் மெய்நிகர் கூட்டத்தை நடத்துவார். மேலும் “உறுதியான உறுதிமொழிகளுக்கான நேரம் இது” என்றும் அவர் கூறியுள்ளதாக டவுனிங் ஸ்டீரிட் தெரிவித்துள்ளது. சுமார் 25 தலைவர்கள் இந்த அழைப்பில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது அமைதி காக்கும் ஒப்பந்தம் தொடர்பில் அவர்கள் விரிவாக விவாதம் நடத்தவுள்ளனர். இதற்கிடையில் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவைத் தொடர்ந்து அதிகரிக்குமாறும் பிரதமர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில் […]

பொழுதுபோக்கு

இரண்டு மணி நேரத்தில் 40க்கும் அதிகமான சிகரட்டுக்களை ஊதி முடித்த ஜீவா

  • March 15, 2025
  • 0 Comments

சினிமாவில் ஆரம்பத்தில் சில கெட்ட பழக்கத்திற்கு அடிமையான சிலர் அதன் பிறகு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டது உண்டு. அந்த வகையில் ரஜினி தான் மது மற்றும் சிகரெட் ஆகியவற்றில் அடிமையாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதோடு தினமும் அசைவ சாப்பாடு இருந்தால் தான் சாப்பிடுவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது தனது மனைவியால் எல்லாவற்றையுமே விட்டுவிட்டு ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் நேரடியாகவே சொல்லி உள்ளார். இந்த சூழலில் ரஜினியே மிஞ்சும் அளவிற்கு நடிகர் ஜீவா 2 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனி வில்லியம்ஸ் மீட்கப்படுவாரா? – ஏவப்படும் ரொகெட்!

  • March 15, 2025
  • 0 Comments

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ராக்கெட், இரண்டு நாசா விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக மாற்று குழுவினருடன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனி வில்லியம்ஸ் ஆகியோர் ஒன்பது மாதங்களாக ISS இல் சிக்கித் தவித்து வருகின்றனர், அவர்களின் வீடு திரும்பும் பயணம் பலமுறை தாமதமானது. க்ரூ-10 பணி ஆரம்பத்தில் புளோரிடாவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட மாற்று குழுவினரை கடந்த புதன்கிழமை ஏவ திட்டமிட்டது. ஆனால் ராக்கெட்டின் தரை அமைப்புகளில் […]

இலங்கை

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடி!

  • March 15, 2025
  • 0 Comments

ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (15) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

உலகம்

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ள கனடாவின் புதிய பிரதமர்

  • March 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே இடம்பெறும் வர்த்தக போருக்கு மத்தியில் அவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். ‘மற்றுமொருவர் கொண்டு செல்ல முடியாத வகையில் நம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டும்” என்று கனடாவின் புதிய பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

  • March 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளானது . இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள வீதியில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார் ஒன்றை மோதி தள்ளியதில் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய தேர்தலுக்கு உதவும் எலோன் மஸ்க்!

  • March 15, 2025
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையின் உதவியைப் பெற்று, வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தேர்தல் முடிவுகளைத் திறம்பட வழங்க ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் டெல்ஸ்ட்ரா மற்றும் ஸ்டார்லிங்கிற்கு 1.38 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்த காலம் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நீடிக்கும். இந்தப் பரிவர்த்தனை தொடர்பான ஒப்பந்தம் கடந்த அக்டோபரில் கையெழுத்தானது. அதன்படி, NBN நெட்வொர்க்கில் ஏதேனும் சிக்கல் […]