உலகம்

வட்டி விகிதத்தை ஐந்து விகிதமாக உயர்த்திய இங்கிலாந்து வங்கி

இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கி பேங்க் ஆஃப் இங்கிலாந்து கடனுக்கான வட்டி விகிதங்களை 4.5% இல் இருந்து 5% ஆக அதிகரித்துள்ளது. இது 15 ஆண்டுகளில் மிக உயர்ந்த அதிகரிப்பாகும். பெரும்பாலான முன்னறிவிப்பாளர்கள் எதிர்பார்த்ததை விட இது பெரிய அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. “நாங்கள் இப்போது விகிதங்களை உயர்த்தவில்லை என்றால், அது பின்னர் மோசமாகிவிடும்” என்று பாங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மத்திய வங்கியின் நிதி கொள்கை குழுவில் உள்ள உறுப்பினர்களில் […]

ஐரோப்பா

பணவீக்கத்தை பாதியாக குறைப்பது எப்படி ? – ரிஷி சுனக் கேள்வி!

  • June 22, 2023
  • 0 Comments

பேங்க் ஆஃப் இங்கிலாந்து பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதங்களை 5 வீதத்தால் உயர்த்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனெக், பணவீக்கத்தை பாதியாகக் குறைப்பதற்கான உத்திகள் பற்றி கேட்டறிந்தார். பணவீக்கத்தைக் குறைப்பது கடந்த சில மாதங்களாக கடினமாக உள்ளது என்று அவர் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

உலகம்

டெக்ஸாஸில் சூறாவளியில் சிக்கி நால்வர் உயிரிழப்பு!

  • June 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆழங்கட்டி மழையும் பொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் வேறு யாரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனரா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Matador, நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி

இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானிய பிரஜைகளுக்கான பயண ஆலோசனைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. இலங்கையில் சுகாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு இன்னும் பற்றாக்குறை இருப்பதாக பிரித்தானியா தனது பிரஜைகளிடம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியா வெளிநாட்டு பயண ஆலோசனை இணையத்தளத்தின் படி, 2022 ஆம் ஆண்டில் 90,000 பிரித்தானிய பிரஜைகள் இலங்கைக்கு பயணம் செய்ததாகவும், அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் […]

ஐரோப்பா

நிபந்தனைகளை மீறி சுவிஸ் ஆயுதங்களை உக்ரைனுக்கு விற்ற ஜேர்மன்

  • June 22, 2023
  • 0 Comments

ரஷ்ய உக்ரைன் போரில் நடுநிலைமையைப் பின்பற்றுவதில் சுவிட்சர்லாந்து உறுதியாக உள்ளது. ஆகவே, சுவிட்சர்லாந்திடமிருந்து ஆயுதங்கள் மற்றும் போர் வாகனங்களை வாங்கும் நாடுகள், அவற்றை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய தொடர்ந்து அனுமதியளிக்க மறுத்துவருகிறது அந்நாடு. ஆனால், உக்ரைனில், சுவிஸ் நிறுவனமான Mowag நிறுவனத்தின் தயாரிப்பான கவச வாகனங்கள் பயன்படுத்தப்படும் காட்சிகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, சுவிஸ் பொருளாதார அமைச்சகம் விசாரணை ஒன்றைத் துவக்கியது. விசாரணையில், ஜேர்மன் நிறுவனம் ஒன்று சுவிஸ் கவச வாகனங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி […]

இந்தியா

600M ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து; 10 பேர் உயிரிழப்பு

  • June 22, 2023
  • 0 Comments

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் இருந்து பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஹோகாரா அருகே உள்ள கோவிலுக்கு பக்தர்கள் குழுவினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள முன்சியாரியில் 600 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கார் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும், காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் […]

இந்தியா வட அமெரிக்கா

நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம்

  • June 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா , இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 2025க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைகிறது.

ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவில் நிர்வாணக் குளியல்!

  • June 22, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் 3 பாகை செல்சியஸ் உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியளில் ஈடுபட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (22) ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாளாகும். ஆகையால், அதனை கொண்டாடும் விதமாக இந்த விநோத செயலை மக்கள் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

மார்க் ஜூக்கர்பெர்க்கை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்..

  • June 22, 2023
  • 0 Comments

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் இயங்கி வரும் பேஸ்புக் மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கி வரும் நிறுவனமான ட்விட்டர் ஆகியவை அமெரிக்காவில் இயங்கி வருகிறது. சமீபத்தில் ட்விட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. வளர்ச்சி நிலையில் இருக்கும் இந்த முயற்சி “பி92″ என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இம்முயற்சியை மஸ்க் ரசிக்கவில்லை. பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இதை உற்றுக் கவனித்து வந்த ட்விட்டர் ஆதரவாளர் […]

பொழுதுபோக்கு

நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு இத்தனை மில்லியன் டொலர்களா?

1993 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரம்பா. 2010ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் சிஇஓ-வாக இருந்து வருகின்றார். இவர் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்பவர் என்றாலும் சென்னையில் இவர்களின் தொழிற்சாலை ஒன்றும் உள்ளதாம். இந்த நிறுவனம் சமையலறை மற்றும் படுக்கை அறை, குளியல் அறை உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்வதாகும். […]