ஏர் இந்தியா விபத்து – உயிரிழந்தவர்களை அடையாளம் காண மரபணு மாதிரிகள் சோதனை
இந்தியாவில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண நூற்றுக்கணக்கான உறவினர்கள் மரபணு மாதிரிகளைக் கொடுத்துள்ளனர். விபத்தில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் சிலர் விமானம் விழும்போது தரையில் இருந்தவர்களாகும். பெரும்பாலான உடல்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குச் சிதைந்துள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணிகள் தாமதமடைவதால் அவற்றைப் பெற்றுக்கொள்ள காத்திருக்கும் குடும்பங்களும் உறவினர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பொதுவில் மரபணு மாதிரி ஒருவருக்கு ஒத்துப்போகிறதா என்பதைக் கண்டுபிடிக்க 72 மணி நேரம் வரை ஆகும் என்று அதிகாரிகள் […]