வடமேற்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழப்பு
வடமேற்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள தும்பா ஏரியில் படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ குடியரசு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. புதன்கிழமை ஈக்வடேர் மாகாணத்தில் உள்ள பிகோரோ அருகே நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 46 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 107 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இதுவரை 48 உடல்களை அதிகாரிகள் மீட்டு புதைத்துள்ளதாக துணைப் பிரதமரும் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான ஜாக்குமைன் ஷபானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]