பொழுதுபோக்கு

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் மலேரியா!

2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 20 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளளனர்.. எஞ்சிய 17 பேர் இலங்கையர்கள் எனவும், அவர்கள் ருவாண்டா, தெற்கு சூடான், உகண்டா, தான்சானியா, சியரா லியோன் மற்றும் கினியா ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மலேரியா தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் 071 […]

இந்தியா

உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலேசியாவிற்கு விஜயம்:

மலேசியாவில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்று உலகத் தமிழ் மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 21-23 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம் வெளியாகவுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவரே இயக்குனர் மாரி செல்வராஜ் . மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் […]

இலங்கை

விமானிகளின் சம்பளம் குறித்து கரிசனை கொள்ளுமாறு வலியுறுத்தல்!

  • June 28, 2023
  • 0 Comments

விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் விமானிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தற்போது இலங்கை விமான சேவைக்கு 330 விமானிகள் தேவைப்படுகின்றனர். எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையிலிருந்து இடை விலகியமையால் தற்போது விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உரிய நேரத்தில் சேவைகளை முன்னெடுப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விமான பயணிகளான […]

இலங்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை 14 நாட்களுக்குள் செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள தாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்த நிறுவனங்களிடமிருந்து வரி மற்றும் தாமதக் கட்டணமாக 616 கோடி ரூபாவை அரசாங்கம் வசூலிக்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். 10 மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வரிப்பணம் அறவிடப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று (27) அழைப்பு விடுக்கப்பட்டு 14 நாட்களுக்குள் அனைத்துப் பணத்தையும் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் […]

ஐரோப்பா

ஐ.நாவின் குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா!

  • June 28, 2023
  • 0 Comments

ரஷ்யா உக்ரைனில் நிகழ்த்தி வரும் போரில், குழந்தைகள் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஐ.நா மனித உரிமை மீறல் குற்றசாட்டை சுமத்தியுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்துள்ளது.  இது குறித்து நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்ட அறி்க்கையொன்றில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்து 800இற்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்யா கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 136 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும், 518 குழந்தைகள் காயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை மொஸ்கோ நிராகரித்துள்ளது. இது […]

இலங்கை

மட்டக்களப்பில் நெல் விலையினை உறுதிப்படுத்துமாறு கோரி விவசாயிகள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளினால் நெல் விலையினை உறுதிப்படுத்துமாறு கோரி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நெல் விலையினை அரசாங்கம் தீர்மானித்து அதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நெல் கொள்வனவினை மேற்கொள்ளுமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரிலிருந்து ஊர்வலமாக விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கிலோ நெல்லுக்கு 120ரூபா தீர்மானிக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல் கொள்வனவில் […]

பொழுதுபோக்கு

துல்கர் சல்மானின் “King of Kotha” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளியானது!!

  • June 28, 2023
  • 0 Comments

Zee Studios மற்றும் Wayfarer Films’ வழங்கும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இறுதியாக தற்போது இப்படத்தின் இரத்தம் தெறிக்கும், அதிரடியான டீசரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் ‘தி கிங்’ (துல்கர் சல்மான்) வருவதைப் பார்க்கும்போது, நம் […]

இலங்கை

பலாங்கொடையில் புதையல் தோண்ட முற்பட்ட 17 பேர் கைது!

  • June 28, 2023
  • 0 Comments

பலங்கொட – சமனலவெவ பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமனலவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 26 முதல் 54 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.