செய்தி

தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உட்பட 14 பேருக்கு ரெட் கார்ட்… பரபரக்கும் கோலிவுட்

  • July 1, 2023
  • 0 Comments

14 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகியோர் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சொல்லப்படுகிறது. தற்போது அவர்களுடன் தனுஷ், அமலா பால் உள்ளிட்ட மொத்தம் 14 நடிகர்கள் மீது புகார் எழுந்துள்ளதாம். இதுகுறித்து நடிகர் சங்கத்திடம் தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் மீட்டிங் நடைபெற்றது. தேனாண்டாள் முரளி தலைமையில் நடைபெற்ற […]

உலகம்

கென்யாவில் கோர விபத்து! 48 பேர் பலி

கென்யாவில் டிரக்வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் மேற்கு கென்யாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் சிலர் வாகனங்களிற்கு அடியில் சிக்குண்டிருக்கலாம் என உள்ளுர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கெரிச்சோ நகுறு என்ற இரண்டு நகரங்களிற்கு இடையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழைகாரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கெரிச்சோவை நோக்கி […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

  • July 1, 2023
  • 0 Comments

கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்த வாதம் இன்று (01.07) பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் மருதப்பாண்டி ராமேஸ்வரன், ஏ.எல்.எம். அதாவுல்லா, வடிவேல் சுரேஷ், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன் ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

சதுப்பு நிலத்தில் இருந்து உடல் உறுப்புகள் கண்டுபிடிப்பு!

பமுனுகம, நீலசிரிகம பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது […]

இலங்கை

பெருந்தோட்ட மக்களின் EPF, ETF மீது கைவைக்கப்பட்டுள்ளது, 09 வீத வட்டிக்கும் உத்தரவாதம் இல்லை!

  • July 1, 2023
  • 0 Comments

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றின் மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளதாகவும், 09 வீத வட்டி வழங்கப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது எனவும், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு மீதான விவாதம் இன்று (ஜுலை 01) நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”நடுத்தர மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு துணை போக முடியாது […]

பொழுதுபோக்கு

ரசிகருக்கு விஜய் கைப்பட எழுதிய கடிதம்! அட இப்படியெல்லாம் எழுதியுள்ளாரா?

நடிகர் விஜய் கடந்த ஜூன் 22ம் திகதி அவரது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஒரு நிகழ்ச்சி விஜய் ஏற்பாடு செய்திருந்தார். அது மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு உதவும் வகையில் பல விஷயங்களை செய்து இருந்தனர். இந்நிலையில் விஜய் தனது ரசிகர் ஒருவரை பாராட்டி கடிதம் ஒன்றை கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறார். தனது பிறந்தநாள் அன்று […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பு திட்டம் : நடுநிலை வகிக்கும் மைத்திரி!

  • July 1, 2023
  • 0 Comments

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை கொள்கையை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர்’ விவாதிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் மட்டுமே உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு தரப்பினரும் இந்தப் பிரேரணைகளை விமர்சித்தால் அதற்கு மாற்று வழியை முன்வைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். .அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தப் பணியில் நடுநிலைக் கொள்கையை கடைப்பிடிக்கும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா

பிரான்சில் போராட்டம் தொடர்பாக இதுவரை 13,000 பேர் கைது!

பிரான்சில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 13,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போராட்டத்தை கட்டுப்படுத்த நேற்றிரவு 45,000 போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாரிஸில் கடந்த செவ்வாய்கிழமை 17 வயது சிறுவன் போக்குவரத்து விளக்குகளை வேகமாக ஓட்டியதால் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நான்காவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

நீதிமன்றத் தீர்ப்பை மீறி 24,000 பிரித்தானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம்?

ருவாண்டாவிற்கு குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரித்தானியா மற்றும் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்த நாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படுவதில் ஆபத்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே ருவாண்டா திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருந்து 24,000 க்கும் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்!

  • July 1, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு 476 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 317 பேர் ஆண்கள் எனவும்  மீதமுள்ள 159 பேர் பெண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனைகள்,  வேலை வாய்ப்பு மற்றும் நிதிச் சிக்கல்கள்  காதல் உறவுகள் போன்ற காரணங்களுக்காக அதிகளவானோர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. உலகளாவிய ரீதியில்  ஆண் தற்கொலை இறப்புகள் பெண்களின் தற்கொலை இறப்புகளை விட அதிகமாக உள்ளதாக […]