இலங்கை

தாய்லாந்தில் ஏமாற்றப்படும் இலங்கையர்கள் : தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

  • April 21, 2023
  • 0 Comments

போலி நிறுவனங்கள் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் வேலைவாய்ப்பு என தெரிவித்து இலங்கையர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக  தாய்லாந்திற்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இவ்வாறான போலி நிறுவனங்கள் இலங்கையர்களை தாய்லாந்து எல்லை ஊடாக மியன்மார் போன்ற நாடுகளிற்கு கொண்டு சென்று அடிமையாக வைத்திருந்து,   வேலை வாங்குவதாகவும்  தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மியன்மாரிற்குள் கொண்டு செல்லப்பட்ட இலங்கையர்கள் சிலர்  சட்டவிரோதமாக நுழைந்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவை தொழில்விசாவாக மாற்றிதருவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே […]

இலங்கை

மைத்திரியை சிறையில் அடைக்க வேண்டும் – சரத் பொன்சேகா!

  • April 21, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், இழப்பீடு செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போதாது என்றும் அவர் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 21 ஆம் திகதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்இ பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேலியகொடையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் பலவீனமான ஆட்சியாளர்களும்,  பாதுகாப்பு படை பிரதானிகளும் […]

ஐரோப்பா

பசிபிக் கடற்பகுதியில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்ட ரஷ்யா!

  • April 21, 2023
  • 0 Comments

ரஷ்யா தனது பசிபிக் கடற்படை, கப்பற்படையை திடீர் ஆய்வு செய்து முடித்துள்ளதாக மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, பயிற்சியில் 25,000 வீரர்கள், 89 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 167 கப்பல்கள் ஈடுபட்டன. ஆய்வில் ஈடுபட்டிருந்த பசிபிக் கடற்படையின் அனைத்து துருப்புகளும் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தன என்று அமைச்சகம் மேலும் கூறியது. இந்த ஆய்வு நடவடிக்கைகள்,  ம் கடலில் இருந்து  எதிரியின் ஆக்கிரமிப்பைத் தடுக்க படைகளின் உயர் தயார்நிலை […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் பிரதி பிரதமர் டொமினிக் ராப் பதவி விலகினார்!

  • April 21, 2023
  • 0 Comments

பிரிட்டனின் பிரதி பிரதமர் டொமினிக் ராப்  பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொமினிக் ராப் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டார் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அடம்டொலி மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தொடர்ந்து நான் பதவி விலகுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் நானே விசாரணைகளிற்கு அழைப்பு விடுத்தேன் விசாரணை முடிவுகளை அடிப்படையாக வைத்து இராஜினாமா செய்ய தயார் என அறிவித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். […]

வட அமெரிக்கா

வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட தகவல்

  • April 21, 2023
  • 0 Comments

வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை என தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் அடையாளம் தெரியாமல் பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரணை செய்து வருவதாக அமெரிக்காவின் இராணுவ மையம் பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பென்டகன் அதிகாரி சீன்கிர்க்பேட்ரிக் மேலும் தெரிவிக்கையில், வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக எந்த ஒரு வலுவான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியுள்ளார். அதேவேளை, வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஏதேனும் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்கள் கிடைத்தால் மக்கள் அதனை பென்டகனுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் […]

ஆசியா

சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை – 6 மாதங்களின் பின் தமிழருக்கு நிறைவேற்றப்படும் சட்டம்

  • April 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை வழங்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய, போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014-ம் […]

வாழ்வியல்

கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

  • April 21, 2023
  • 0 Comments

கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்பவரா நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. கோடைகால பயணத்தின் போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில தோல் பராமரிப்பு குறிப்புகள் கோடைகாலம் தொடங்கி விட்டாலே பலரும் வெளியில் செல்வதற்கு சற்று தயங்குவதுண்டு. ஏனென்றால் வெளியில் செல்லும்போது உடல் ஆரோக்கியம் மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற அச்சத்திலேயே பலரும் வெளியில் செல்வதற்கு தயங்குவர். அந்த வகையில் கோடைகால பயணத்தின் போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில தோல் பராமரிப்பு குறிப்புகள் பற்றி […]

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
  • 0 Comments

டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை தன்வயப்படுத்தினார். அதன் பின்னர் டுவிட்டர் நிறுவனத்தில், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு […]

அறிந்திருக்க வேண்டியவை ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தால் சர்ச்சை

  • April 21, 2023
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. மலேசியா, காடுகளை அழிப்பதன் தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தைச் சாடியிருக்கிறது. அந்தச் சட்டம் தனது செம்பனை எண்ணெய்த் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மலேசியா குறிப்பிட்டுள்ளது. காடுகளை அழித்த நிலத்திலிருந்து விளையும் பொருள்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்குள் எண்ணெய் வித்துகளின் சந்தையைப் பாதுகாக்கும் நோக்கிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மலேசியத் துணைப் பிரதமர் ஃபதில்லா யூசஃப் கூறினார். புதிய சட்டம், மலேசியாவின் சிறிய விவசாயிகளையே […]

இலங்கை

யாழில் ஆசிரியரின் மோசமான செயல் – மாணவி எடுத்த தீர்மானம்

  • April 21, 2023
  • 0 Comments

யாழ். வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிகள் சிலரைப் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பெற்றோரும் அதிபரிடம் […]

You cannot copy content of this page

Skip to content