வட அமெரிக்கா

கனடாவின் இரு வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; இருவர் பலி

  • April 23, 2023
  • 0 Comments

கனடாவின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பிரம்டன் மற்றும் நோர்த் யோர்க் பகுதிகளில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்டனின் ருதர்போர்ட் மற்றும் பிரம்ஸ்டீலி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் 36 வயதான அமோர் அப்தல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, நோர்த் யோர்க் பகுதியில் மதுபானசாலை ஒன்றில் […]

ஆசியா

ஆசியாவை வாட்டி வதைக்கும் வெப்பம் – பேராசிரியர் வெளியிட்ட தகவல்

  • April 23, 2023
  • 0 Comments

ஆசியாவை வெப்ப அலை, கடந்த சில வாரங்களாக வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, சீனா, தாய்லந்து உள்ளிட்ட நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் வெப்பநிலை எட்டியுள்ளது. பங்களாதேஷில் கடந்த வாரம் 60 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை பதிவானது. இந்தியாவில் வெப்பப் பாதிப்பால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் Chengdu, Nanjing, Hangzhou போன்ற வட்டாரங்களில் இம்மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில்எப்போது மழை பெய்யும், […]

ஆசியா

சிங்கப்பூர் பாடசாலைகளில் புதிய நடைமுறை!

  • April 23, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் உள்ள பாடசாலைகளில்  சூரியத் தகடுகளை மேற்கூரைகளில் பொருத்தும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும் அதில் 180க்கும் அதிகமான பாடசாலைகள் கலந்துகொண்டுள்ளன. ஏறத்தாழ 40 பாடசாலைகளில் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. பூமி தினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில், பாடசாலைகளின் நீடித்த நிலைத்தன்மை நடவடிக்கைகள் பக்கம் கவனம் திரும்பியது. Edgefield உயர்நிலைப் பள்ளியின் 40 விழுக்காட்டு எரிசக்தி, சூரியத் தகடுகளிலிருந்து பெறப்படுகிறது. வகுப்பறையிலுள்ள மின்விளக்குகளும் மின்விசிறிகளும் இவற்றின் துணைகொண்டு இயங்குகின்றன. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அண்மைக் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மத குருமார்களின் அதிர்ச்சி செயல் – விசாரணைகள் ஆரம்பம்

  • April 23, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் கத்தோலிக்க மத குருமார் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுப்பட்டதாக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த காலங்களில் கத்தோலிக்க மத குருமார்கள் பாலியல் துஸ்பிரயோக விடயங்களில் ஈடுப்பட்டுள்ளதாக பல விசாரணை கமிஷன்கள் ஆரம்பிக்கப்பட்டு  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளையில் குறித்த மத குருமார்கள் தொடர்பில் பல புகார்கள் வந்த நிலையில் பிராந்தியத்திற்கு உரிய மறைமாவட்ட ஆயர்கள் அதன் தொடர்பில் கவனிக்க தவறியமை தற்போது தெரிய வந்திருக்கின்றது. இந்நிலையில் தெற்கு ஜெர்மனியின் ஃபைர்பேர்க் ஆயர் சபைக்கு உள்ளடங்கிய பிராந்தியத்தில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – வெளிநாட்டவர்கள் உட்பட ஐவர் பலி

  • April 23, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நேர்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பரபரப்பான நெடுஞ்சாலைக்குள் நுழையுமுன், வாகன ஓட்டுநர் ஒருவர் வழிவிட மறுத்ததால் அந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் தைவானையும் ஹொங்காங்கையும் சேர்ந்த ஊழியர்களும் அடங்குவர் என நம்பப்படுகிறது. வாகனத்தை ஓட்டிச்சென்று உயிரிழந்த பெண்ணிடமே ஏனையோர் பணிபுரிந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனமோட்டியோடு நபர் ஒருவரும் பெண்கள் மூவரும் அந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான வகையில் வாகனமோட்டி மரணம் விளைவித்ததாக 29 வயது நபர் ஒருவர் […]

இலங்கை

இலங்கையில் சிறுவனின் உயிரை பறித்த புத்தாண்டு நிகழ்வு

  • April 23, 2023
  • 0 Comments

அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்றிருந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 10 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். 15 வயதான தமது சகோதரருடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றிருந்த குறித்த சிறுவன் ஓடிக் கொண்டிருந்த நிலையில் கீழே வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் கலாவெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்தார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஜெர்மன் மொழி தெரியாமல் வாழும் மக்கள்!

  • April 23, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வாழுகின்ற மக்களில் 15 வீதமானவர்கள் ஜெர்மன் மொழி தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் என்ற புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் வாழுகின்ற மக்களில் 15 வீதமானவர்கள் ஜெர்மனி மொழியை பேசவோ அல்லது போதுமான அளவு அறிவை கொண்டவர்களாக இல்லை என்று தெரியவந்திருக்கின்றது. இவ்வாறு ஜெர்மனிய மொழி தெரியாதவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல சிக்கலை எதிர் நோக்குகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லண்டன் சோஸ்அல்கரிக் நீடண்சக்சர்ஸ் ஹம்பேர்க் இல் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்  ஜெர்மனி […]

இலங்கை

தேர்தலுக்கு தயார் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ

  • April 23, 2023
  • 0 Comments

எந்த நேரத்திலும், எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கட்சி என்ற ரீதியில் அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் நேற்று (22) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கட்சி தீர்மானத்துக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்,ஏனைய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.தற்போதைய […]

இலங்கை செய்தி

முதியோர்களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை – அரச ஊடக நிறுவனம் ஒன்றின் அறிவிப்பாளர் ராஜினாமா

  • April 22, 2023
  • 0 Comments

இலங்கையிலுள்ள அரசாங்க ஊடக நிறுவனமொன்றில் தொகுப்பாளராகப் பணியாற்றிய இஷாரா தேவேந்திரா, தனது சுயமரியாதைக்காக தனக்குப் பிடித்த வேலையைத் துறக்க முடிவு செய்ததாகக் கூறுகிறார். மேலும் பலம் வாய்ந்ததாகக் காட்டிக் கொள்ளும் நிறுவனத்தில் உள்ள முன்னாள் மூத்தவர்களின் மன உளைச்சலைத் தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார். எனக்கு பிடித்த வேலையை விட்டுவிட்டேன்… சுயமரியாதைக்காக.. இந்தக் கதையை 15.03.2023 அன்று சொல்ல விரும்பினேன். […]

இலங்கை செய்தி

குழந்தை கண்முன்னே நீர்வீழ்ச்சியில் குதித்த தாய்

  • April 22, 2023
  • 0 Comments

குடும்ப தகராறு காரணமாக திம்புள்ள பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான லெச்சுமன் நிஷாந்தனி (வயது 34) என்பவர் டொவன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து காணாமல் போயுள்ளார். குடும்பத் தகராறு தொடர்பில் இரண்டு பிள்ளைகளுடன் திம்புல பத்தனை […]

You cannot copy content of this page

Skip to content