ஐரோப்பா

சூடானிலிருந்து 150 பேரை கப்பல் மூலம் மீட்டடெடுத்த சவுதி அரேபியா

  • April 23, 2023
  • 0 Comments

சூடானில் கடுமையான போர் நடைபெறும் வேலையில் அங்கிருந்து இந்தியர்கள் உட்பட , 150 வெளிநாட்டினரை சவுதி அரேபிய அரசு கப்பல் மூலம் மீட்டுள்ளது. சூடான் நாட்டில் ராணுவ மற்றும் துணை ராணுவத்தினரிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் 400 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்களும் அடங்குவர். மேலும் சில வெளிநாட்டவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தடுமாறி […]

இலங்கை

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை இல்லை – பிரசன்ன ரணதுங்க!

  • April 23, 2023
  • 0 Comments

அரசியலமைப்புக்கு அமைய ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஜனாதிபதி பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடுவலை பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு    பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது. நெருக்கடியான சூழலில் தலைமைத்துவத்தை ஏற்கும் தைரியம் […]

இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு வலியுறுத்தும் சிவில் சமூக பிரதிநிதிகள்!

  • April 23, 2023
  • 0 Comments

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு சிவில் சமூக பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பயங்கரவாதத்தடைச் சட்டத்தைவிட மிகமோசமான இச்சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெறவேண்டுமென மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். அதன் ஓரங்கமாக சிவில் சமூக உறுப்பினர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை […]

பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
  • 0 Comments

பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன் சக்தி மித்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சரியான போட்டியாக பார்க்கப்படுகிறது. பாண்டியர்களின் படை பலத்தையும் குறுநில மன்னர்களான எயினர்களின் படை பலத்தையும் பறைசாற்றும் வகையில் யாத்திசை படத்தை இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். இந்நிலையில். இந்த படத்தின் முதல் நாள் வசூல் […]

இலங்கை

என்ஜியோகிராம் கருவிகள் இல்லாததால் உயிரிழக்கும் இதய நோயாளிகள்!

  • April 23, 2023
  • 0 Comments

இதய நோய்கள் தொடர்பாக பரிசோதனை செய்யும் என்ஜியோகிராம் கருவிகள் இல்லாததால் நோயாளிகள் பலர் உயிரிழந்து வருவதாக பதுளை பொது வைத்தியசாலையின், சிரேஷ்ட வைத்திய அதிகாரியும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்ககத்தின் உதவிச் செயலாளருமான பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதை அறிந்து இரத்த நாளங்களை எக்ஸ்ரே படங்களின் மூலம் கண்டறிவதற்கு என்ஜியோகிராம் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு […]

இலங்கை

நெடுந்தீவு கொலை சம்பவம் : நகைகளுக்காக கொலை செய்தேன் – சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம்!

  • April 23, 2023
  • 0 Comments

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 26 தங்கப் பவுண் நகைகள்,  ஆடைகள் மற்றும் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.  100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட […]

ஆசியா

இன்று இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் – பீதியில் உறைந்த மக்கள்!

  • April 23, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கங்களால் ஏற்பட்ட […]

ஐரோப்பா

லண்டனில் அனைவரையும் ஈர்த்த 100 ஆண்டு பழமையான இந்திய உணவகம்

  • April 23, 2023
  • 0 Comments

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த 2ம் எலிசபெத் ராணி கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் மரணம் அடைந்தார்.அதற்கு பிறகு இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை ஏறினாலும் அதிகாரபூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக்கொள்ளவில்லை. அவரது முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய விழா என்பதால் லண்டன் நகரம் இப்போதிலிருந்தே விழாக்கோலம் பூண்டு வருகிறது.முடிசூட்டு விழாவின்போது லண்டன் வீதிகளில் சிறப்பு விருந்து, […]

இலங்கை

சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை கோரும் இலங்கை!

  • April 23, 2023
  • 0 Comments

சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து  குரங்குகளை பெற முயன்ற சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய சீன நிறுவனத்தின் விபரங்களை தருமாறு சீன தூதரகத்தை கேட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை  குரங்குகளைஏற்றுமதி செய்வது சாத்தியமா என்பது குறித்து ஆராய்வதற்காக  குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மகிந்த அமரவீர மூன்று தடவை சந்தித்துள்ளார். இதேவேளை கிடைத்த தகவல்களை ஆராய்ந்தவேளை குறிப்பிட்ட சீன […]

வட அமெரிக்கா

சூடானில் இருந்து ராணுவ உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்

  • April 23, 2023
  • 0 Comments

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, சண்டை நடந்து வரும் சூடான் நாட்டில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, எங்களது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர் […]

You cannot copy content of this page

Skip to content