இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

  • April 26, 2023
  • 0 Comments

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (25) மட்டும் புதிய தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா

சூடான் துணை ராணுவத்திடம் சிக்கியுள்ள ஆபத்தான உயிரியல் ஆய்வகம்; WHO தலைவர் எச்சரிக்கை!

  • April 26, 2023
  • 0 Comments

சூடானில் கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்ட உயிரியல் ஆய்வகம் ஒன்றை துணை ராணுவப்படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் சூடானில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தொழில்நுட்ப வல்லுநர்களால் குறித்த ஆய்வகத்தை பாதுகாக்க முடியவில்லை எனவும், தற்போது போலியோ, காலரா மற்றும் அம்மை நோயை ஏற்படுத்தும் கிருமிகளை ஆய்வு செய்யும் உயிரியல் ஆய்வகம் சிக்கலில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், சூடானுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் […]

செய்தி தமிழ்நாடு

கோடை விடுமுறை வேண்டும்-அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

  • April 26, 2023
  • 0 Comments

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு பள்ளிகளுக்கு வழங்குவது போன்று கோடை விடுமுறை வழங்க வேண்டும் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முழுவதும் நேற்று முதல் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சிய அலுவலகங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோன்று புதுக்கோட்டையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு […]

செய்தி தமிழ்நாடு

மாணவ மாணவிகள் அவதி

  • April 26, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலமாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வந்தது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7:00 மணி முதல் தற்போது வரை தொடர்ந்து இடியுடன் கனமழை பெய்து வருகிறது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் நீர்நிலைகளுக்கு செல்லும் வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக ஆங்காங்கே அலுவலகங்கள் பள்ளிக்கூடங்கள் மார்க்கெட்டுகள் ஆகிய பகுதிகளில் நீர் சென்றது […]

செய்தி தமிழ்நாடு

காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல மனு

  • April 26, 2023
  • 0 Comments

கனிம வள கொள்ளையை கண்டித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு- பாஜக மாநில விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ். காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி பாஜக விவசாய அணி சார்பில், மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அவர்கள் அளித்த மனுவில், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் விளை நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை உடனடியாக சுட்டுக் கொல்ல நடவடிக்கை […]

ஐரோப்பா

இனி இந்த நாட்டில் செல்ஃபி எடுத்தால் 275 யூரோ அபராதம்!

  • April 26, 2023
  • 0 Comments

இத்தாலியில் எதிர்வரும் காலத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த தீர்மானத்தை இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒன்றின் நகர அதிகாரிகள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 275 யூரோ அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதிகாரிகளின் இந்த முடிவு தொடர்பில் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுக்க முயல்வதால் பகலில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செய்தி தமிழ்நாடு

7 பிரிவுகளாக நடந்த எல்கை பந்தயம்

  • April 26, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு 83ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை – வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இந்த போட்டியில் மதுரை, திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் – மற்றும் குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டன. இந்த போட்டியானது காலை மாலை என நடைபெற்ற உள்ள இதில் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

  • April 26, 2023
  • 0 Comments

மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாத்தறை, நுபே புகையிரத கடவைக்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பெந்தோட்டகேவத்த என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேலும் மூன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக […]

செய்தி தமிழ்நாடு

ஆற்றின் குறுக்கே தடுப்பணை கேரளா அரசை கண்டித்து போராட்டம்

  • April 26, 2023
  • 0 Comments

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை மறித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி ஆற்றில் அட்டப்பாடி அருகில் கூலி கடவு என்ற பகுதியில் கேரளா அரசு தடுப்பணையை கட்டி வருகிறது.90% பணிகள் முடிந்து விட்ட நிலையில் மேலும் இரண்டு அணைகள் கட்ட ஆயத்தமாகி வருகின்றனர். இந்த அணை கட்டுவதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு என்பது அதிகமாகவே […]

செய்தி தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி மக்கள் மகிழ்ச்சி

  • April 26, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தாலும் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் புதுக்கோட்டை நகரப் பகுதியில் பகலில் கார்மேகம் சூழ்ந்து திடீரென மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக புதுக்கோட்டை நகரப் பகுதிகளான கிழ ராஜ வீதி அய்யனார்புரம் காந்திநகர் அசோக் நகர் சத்தியமூர்த்தி நகர் சின்னப்பா நகர் சேங்கன்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]

You cannot copy content of this page

Skip to content