இலங்கை

ஈரானில் 5 நாட்களில் 800க்கும் அதிகமானோர் பாதிப்பு!

  • July 8, 2023
  • 0 Comments

ஈரானில் வீசும் மோசமான மணல் புயல் காரணமாக கடந்த 5 நாட்களில் 800க்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தென்கிழக்கில் Sistan, Baluchestan ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 100க்கும் அதிகமானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மணல் புயலால் இதயத்திலும் கண்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மணல் புயலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குடியிருப்பாளர்களுக்கு 6,000க்கும் அதிகமான முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும்நாள்களில் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் […]

வட அமெரிக்கா

கனடாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வீடுகளை விட்டு வெளியேறியுள்ள லட்ச கணக்கான மக்கள்

  • July 8, 2023
  • 0 Comments

கனடாவில் காட்டுத் தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் 670க்கும் அதிகமான காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. எப்படியிருப்பினும் அவற்றில் 380க்கும் மேற்பட்ட சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தீவிரக் காட்டுத் தீக்கான பருவம் முடிய இன்னும் குறைந்தது 3 மாதங்கள் இருப்பதாகக் கனடிய இயற்கை வள அமைச்சகத்தைச் சேர்ந்த Michael Norton கூறுகிறார். கனடாவின் மேற்கிலுள்ள பகுதிகளில் வரவிருக்கும் வாரங்களில் ஏற்கெனவே கணிக்கப்பட்டதைக் காட்டிலும் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. 9 மில்லியன் ஹெக்டர் காடுகள் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சொக்லேட் விலைகள் எதிர்பாராத அளவு அதிகரிப்பு

  • July 8, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் சொக்லேட் விலை கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொக்கோவின் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அதிக தேவை மற்றும் கோகோ அதிகம் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக, உற்பத்தியின் வீழ்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏற்கனவே கோகோ விலை கிட்டத்தட்ட 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. கொக்கோ பயிர்ச்செய்கை தொடர்பில் பரவி வரும் நோய் தொற்று காரணமாக உற்பத்தியும் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்வியல்

இரவில் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • July 8, 2023
  • 0 Comments

நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. நன்கு காய்ச்சிய நீரில் இருந்து வெளிப்படும் நீராவியை ஆழமாக உள்ளிழுத்து சுவாசிப்பது மூக்கடைப்புக்கு நிவாரணம் தரும். சைனஸ் தலைவலி பாதிப்பில் இருந்து விடுபடவும் உதவும். சைனஸ் பிரச்சினையை எதிர்கொண்டவர்களுக்கு தொண்டை முழுவதும் சளி சவ்வுகள் படர்ந்திருக்கும். சூடான நீரை பருகுவது அந்த பகுதியை சூடாக்க உதவும். மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு சூடான […]

இலங்கை

இலங்கை கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

  • July 8, 2023
  • 0 Comments

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை இந்த ஆண்டு இறுதிக்குள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை அறிவித்துள்ளார். கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், சாதாரண தர பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்த […]

அறிந்திருக்க வேண்டியவை

காலையில் எழுந்ததும் பார்க்க கூடாத பொருட்கள்!

  • July 8, 2023
  • 0 Comments

காலையில் எழுந்து இந்த பொருட்களை எல்லாம் பார்க்க கூடாது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அவை என்னென்ன என தற்போது பார்போம். ஓடாத கடிகாரம்: காலையில் எழுந்த உடன் ஓடாத கடிகாரங்களை பார்க்க கூடாது. வாஸ்துபடி ஓடாத கடிகாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. உடைந்த கண்ணாடி: உடைந்த எந்த பொருளையும் காலையில் பார்க்க கூடாது. குறிப்பாக முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்திருந்தால் அதனை பார்த்தால் நல்லதல்ல கூறப்படுகிறது. கழுவாத பாத்திரங்கள்: காலையில் கழுவாத […]

உலகம்

உச்சத்தைத் தொட்ட உலக வெப்பநிலை – பூமிக்கு காத்திருக்கும் பேராபத்து.

  • July 8, 2023
  • 0 Comments

உலகில் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் பூமிக்கு மிகப்பெரிய பேராபத்து வரப்போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் அளவு புதிய உச்சத்தை தொட்டது. இது மனிதர்களின் நடவடிக்கையினாலேயே நடக்கிறது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாகவே திடீரென கொட்டித் தீர்க்கும் மழை, கோடைக்காலத்தில் அதிக வெப்பம் என பல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். என்னதான் இந்த பருவநிலை […]

ஆசியா

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர் – அமைச்சர் பதவி இராஜினாமா

  • July 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள தமிழரான தர்மன் சண்முகரத்தினம் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் மக்கள் செயல் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து கட்சி உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் […]

ஐரோப்பா

ஜெர்மனிக்கு மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் தேவை

  • July 8, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டுக்கு ஒரு மில்லியனுக்கு மேலான வெளிநாட்டவர்கள் தேவை என்ற விடயம் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் முன்னனி பொருளாதார வல்லுனர்களின் கருத்து படி அதாவது ஷில்ஸ்செல்பர் கருத்து தெரிவிக்கையில் ஜெர்மன் நாட்டுக்கு வருடம் ஒன்றுக்கு 1.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் தேவைப்படுவதாக கூறியிருக்கின்றார். அதாவது 15 லட்சம் இவ்வாறான வெளிநாட்டவர்கள் ஜெர்மன் நாட்டுக்கு வந்தால் மட்டுமே ஜெர்மன் நாட்டில் இருந்து தங்களது நாட்டுக்கு அல்லது வேறு நாட்டுக்கு போகின்றவர்களுடைய தொகையை கழிக்கும் பொழுது மீதியாக 4 லட்சம் பேர் இந்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் 80 தபாலகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

  • July 8, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த ஒருவாரமாக இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 150 தபாலகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. தபாலங்களுடன் இணைந்துள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல தபாலங்கள் எரிக்கப்பட்டும், அடித்து நொருக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையாவை இல் து பிரான்ஸிற்குள் உள்ள நிலையங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தபாலகங்களில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டதாக […]