உலகம்

மார்க் – மஸ்க் மோதலால் கின்னஸ் சாதனை புரிந்த MrBeast

  • July 9, 2023
  • 0 Comments

திரெட்ஸ் செயலியில் முதன் முறையாக 1 மில்லியன் Followers பெற்று MrBeast என்ற பிரபல யூட்யூபர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று டுவிட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அறிமுகம் செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த MeBeast என்ற பிரபலமான Youtube தளத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவர், Threads செயலியில் முதல் 10 லட்சம் Followersகளை கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி கடந்த 48 […]

ஐரோப்பா

பைடனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் – காங்கிரஸ் கட்சி விமர்சனம்!

  • July 9, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செயற்பாடுகள் தேச துரோக குற்றத்திற்கு வழிவகுக்கலாம் எனவும், இதற்காக அவருக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், அரசியல் செயற்பாடாளருமான ஸ்டூப் , விமர்சித்துள்ளார். பென்னி ஜான்சன் போட்காஸ்டில் அவர் அளித்த செவ்வியில் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார். உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்குவது உள்பட, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது வரை பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்களை பைடனின் அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

  • July 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக லொரிகள் சிலவற்றில் கட்டாய வேக வரம்புச் சாதனம் பொருத்துவது குறித்த தகவல்கள் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. 3,500 கிலோகிராமுக்கு மேல் பாரம் ஏற்றும் லொரிகளில் வேக வரம்புச் சாதனம் பொருத்தவேண்டும். அத்தகைய வாகனங்களில் பயணம் செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை அது வலுப்படுத்தும். ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லொரிகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அது குறித்து ஆராயப்படுகிறது. சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் விரைந்து […]

ஐரோப்பா

புறப்பட முடியாத அளவிற்கு சுமைக் கூடியதால் 19 பயணிகளை விட்டுச் சென்ற ஈஸிஜெட் விமானம்!

  • July 9, 2023
  • 0 Comments

புறப்பட முடியாத அளவிற்கு சுமைக் கூடியதால் பிரிட்டிஷ் எர்லைன்ஸ் ஈஸிஜெட் விமானமானது சில  பயணகிகளை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றுள்ளது. ஸ்பெயினின் லான்சரோட் விமான நிலையத்திலிருந்து லிவர்பூலின் ஜான் லெனான் விமான நிலையத்திற்கு புறப்பட   இருந்த பயணிகளே இந்த அரிய நிகழ்வுக்கு முகம் கொடுத்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள விமான நிறுவனம், “இன்று இங்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி,  உங்களில் பலர் இருப்பதால், விமானம் புறப்படுவதற்கு கனமாக உள்ளது. ஆகவே உங்களில் யாரேனும் 20 பேர் லிவர்பூலுக்கு […]

இலங்கை

இலங்கை மக்களின் வருமானம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

  • July 9, 2023
  • 0 Comments

இலங்கை மக்களின் வருமானம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் […]

செய்தி மத்திய கிழக்கு

பணக்கார நாடாக மாறிவரும் குவைத்

  • July 8, 2023
  • 0 Comments

உலகின் பணக்கார அரபு நாடுகளில் குவைத் முதலிடத்திலும், உலக அளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக புள்ளியியல் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. குவைத் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் 1 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தனியார் சொத்துக்களை வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உலக அளவில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு 15.5 சதவீத மக்கள் பணக்காரர்கள். இரண்டாவது இடத்தில் உள்ள ஹாங்காங்கில், 15.3 சதவீத […]

ஆசியா செய்தி

தந்தையை திருமணம் செய்துகொண்ட மகள்

  • July 8, 2023
  • 0 Comments

சமீபத்தில் இப்படியொரு வழக்கு பாகிஸ்தானில் இருந்து வெளிவந்துள்ளது, இதைப் பற்றி கேள்விப்படும் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். வீடியோவில், ஒரு பெண் தனது தந்தையை திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். இதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தையும் அந்த பெண் கூறியுள்ளார். வைரலாகி வரும் வீடியோவில், ஒரு பெண் அவரது தந்தையும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவில் பெண் தனது தந்தையை திருமணம் செய்து கொண்டதாக கூறி உள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் […]

உலகம் செய்தி

58 மணி நேரம் நீடித்த கின்னஸ் சாதனை முத்தம்!

  • July 8, 2023
  • 0 Comments

  எனக்கு ஒரு முத்தம் கொடு. ஆனால் இது வெறும் முத்தம் அல்ல, கின்னஸ் புத்தகத்தில் பெயர் எழுதப்பட்ட முத்தம். ஏனெனில் மிக நீண்ட முத்தம் என்ற கின்னஸ் சாதனையை கின்னஸ் கமிட்டி நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏன் அப்படி நடந்தது? இதுதான் கதை. மிக நீண்ட முத்தம் என்பது ஓரிரு மணி நேரத்தில் முடிவடையும் முத்தம் அல்ல. இது மிகவும் நீண்டது, 58 மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்த முத்தம். அந்த வகையில் […]

செய்தி மத்திய கிழக்கு

பயணிகளுக்கு 30 வகையான பொருட்களை சவுதி தடை செய்துள்ளது

  • July 8, 2023
  • 0 Comments

ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசிஸ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கேஜில் 30 பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவற்றைத் திரும்பக் கேட்க பயணிகளுக்கு உரிமை இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஹஜ் யாத்ரீகர்கள் இந்த ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று விமான நிலையம் எச்சரித்தது. இதில் 16 பொருட்கள் விமான கேபின்களில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த பொருட்களில் கத்திகள், […]

இலங்கை செய்தி

செந்தில் தொண்டமானின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

  • July 8, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளராக A.L.M.லப்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். A.L.M.லப்பீர் இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு தாய்லாந்து,கனடா,சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். இறுதியாக அவர் ஜோர்தான் நாட்டில் இலங்கைக்கைகான தூதுவராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.