மட்டக்களப்பில் நடைபெற்ற சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சமகால அரசியல் கலந்துரையாடல்
வடகிழக்கில் உள்ள மூன்று இனங்களினதும் தனித்துவத்தினையும் அவர்களின் தேசியத்தினையும் உறுதிப்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வுத்திட்ட வரைபினை முன்கொண்டுசெல்லவுள்ளதாக யாழ்பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தினை உள்ளடக்கிய சிவில்சமூக பிரதிநிதிகளுடனான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மக்கள் சிந்தனை மையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள்,யாழ்பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் தலைமையில் […]