உலகம் தென் அமெரிக்கா முக்கிய செய்திகள்

தென் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி!

  • May 1, 2023
  • 0 Comments

தென் அமெரிக்காவின் ஒரு முனையில் அமைந்துள்ள ஈக்குவாடோரின்  குவாயாகில் நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ஐந்து வயது சிறுமி உள்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். ஈக்வடோரில்,  போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது.  அவர்கள் அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் […]

ஐரோப்பா

ஜேர்மனியின் 49 யூரோக்கள் பயணச்சீட்டு; இதுவரை 3 மில்லியன் சீட்டுகள் விற்பனை

  • May 1, 2023
  • 0 Comments

ஜேர்மனி மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் கட்டணத்தில் புதிய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது. இந்நிலையில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த பயணச்சீட்டுகளை வாங்கியுள்ளதாக ஜேர்மன் பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மக்கள் தங்கள் கார்களை வீட்டில் நிறுத்திவிட்டு, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, 9 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது, […]

உலகம் ஐரோப்பா

ஸ்பெயினில் இலகுரக விமானங்கள் மோதி நால்வர் உயிரிழப்பு!

  • May 1, 2023
  • 0 Comments

வடகிழக்கு ஸ்பெயினில் இலகுரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு ஸ்பெயினின்  மோயா நகர விமான நிலையம் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது. குறித்த விமானங்களில் நால்வர் பயிணித்துள்ள நிலையில், அனைவரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் 7 மாத சிசு பலி

  • May 1, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள விலாப்பட்டி மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி விஜயா தம்பதியினர். இவர்களது மகன் அரவிந்தன்(25). இவர் சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் மாஸ்டராக உள்ள நிலையில் இவருக்கும் சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த குமரன் என்பவரது மகள் நாகேஸ்வரிக்கும் (22) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே நாகேஸ்வரியின் கணவர் அரவிந்தன் மாமியார் விஜயா […]

செய்தி தமிழ்நாடு

விஷவாயு தாக்கி இருவர் பலி

  • May 1, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய நேதாஜி நகர் 18வது வார்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியான இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து வரும் கோவிந்தன் (45) மற்றும் சுப்புராயலு (45) இருவரும் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

ஐரோப்பா

ரஷ்யாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது!

  • May 1, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதுடன்,  மின்கம்பியும் வெடித்து சிதறியதாக உள்ளூர் ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் எல்லையாக உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் குறித்த ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன்  ஒரு மின்கம்பி வெடித்து சிதறியதுடன்,  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே  வெடிக்கும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார். ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் தளத்தில் பணியாற்றி வருவதாகவும் டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

ISIS தலைவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் ஏரோடகன் அறிவிப்பு!

  • May 1, 2023
  • 0 Comments

துருக்கி ராணுவத்தினர் சிரியாவில் ISIS தலைவர் அபு ஹூசேன் குவாரேஷியை சுட்டுக் கொன்றதாக அதிபர் ஏரோடகன் தெரிவித்துள்ளார். துருக்கியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் அபு ஹூசேனை கண்காணித்து வந்துள்ளதாக கூறினார். அதன்படி நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் ISIS தலைவர் கொல்லப்பட்டதாக அவர் உறுதி செய்தார். இந்நிலையில் தீவிரவாத இயக்கங்கள் மீது தொடர்ந்து பாரபட்சமற்ற யுத்தம் தொடரும் என்றும் ஏரோடகன் உறுதிபடத் தெரிவித்தார்.இதன்போது தீவிரவாதிகள் தாக்குதலால் துருக்கியில் இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்து […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பு – ஜனாதிபதி

  • May 1, 2023
  • 0 Comments

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். […]

இலங்கை

இந்தியன் விசா குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

  • May 1, 2023
  • 0 Comments

சில போலி/மோசடி இணைய URLகள் மூலமாக இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தாயுள்ளது  

ஆப்பிரிக்கா முக்கிய செய்திகள்

சூடானின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராயுமாறு ஐநா வலியுறுத்தல்!

  • May 1, 2023
  • 0 Comments

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார். நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72 மணிநேர போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதாகக் கூறிய இரு தரப்பினரும் தொடர்ந்தும் போராடி வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். சூடான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை […]

You cannot copy content of this page

Skip to content