செய்தி

இந்தோனேசியாவை உலுக்கிய எரிமலை குமுறல் – விமானச் சேவைகள் இரத்து

  • June 18, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் லெவோடொபி லகி-லகி (Lewotobi Laki-Laki) எரிமலை மிகப்பெரிய அளவில் குமுற ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவத்தைக் கருத்தில்கொண்டு பாலி தீவுக்குச் செல்லவிருந்த அல்லது அங்கிருந்து புறப்படவிருந்த குறைந்தது 24 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Jetstar, Virgin Australia, Air India, Air New Zealand, Scoot, Juneyao Airlines போன்ற விமானச் சேவைகள் அதில் அடங்கும். கிழக்கு நூசா தெங்காரா மாநிலத்தில் இருக்கும் லெவோடொபி லகி-லகி எரிமலை 11 கிலோமீட்டர் உயரத்துக்குச் சாம்பலும் புகையும் கக்கியதாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இனி வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணமா?… வெளியான தகவல்!

  • June 18, 2025
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பல ஆண்டுகளாக விளம்பரங்கள் இல்லாமல் தனது பயனர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கி வந்தது. ஆனால், அந்த காலம் முடிந்துவிட்டது! இனி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் (‘அப்டேட்ஸ்’ டேப்) விளம்பரங்கள் தோன்றப் போகின்றன. ஏன் இந்த மாற்றம்? மெட்டா நிறுவனம் ஏன் இந்த முடிவை எடுத்தது, என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். முக்கியமாக, உங்கள் தனிப்பட்ட சாட்கள், குழு உரையாடல்கள் அல்லது அழைப்புகளில் விளம்பரங்கள் […]

வட அமெரிக்கா

ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

  • June 18, 2025
  • 0 Comments

முன்நிபந்தனை எதுவுமின்றி சரண் அடையும்படி ஈரானை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். போர் 6ஆவது நாளாகத் தொடரும் நிலையில் அவரது எச்சரிக்கை வந்திருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்துகொண்டு ஈரானைத் தாக்கலாம் என்ற ஊகம் நிலவுகிறது. அமெரிக்கா பொறுமை இழந்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் தொடங்கியது. இருநாட்டுக்கும் இடையே போர் நீடிக்கிறது. இதற்கிடையே திரு டிரம்ப் ஈரானிய உச்சத்தலைவர் ஆயதுல்லா அலி ஹமேனியைக் கொல்லும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று கூறியிருக்கிறார். […]

செய்தி விளையாட்டு

புதிய விதிகளை விரைவில் அறிவிக்கும் ஐசிசி..!

  • June 18, 2025
  • 0 Comments

டெஸ்ட் போட்டிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விதிகளை ஐசிசி கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் முடிந்துள்ள நிலையில் அதில் தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இனி 2027 ஆம் ஆண்டு நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளை கூடுதல் விறுவிறுப்பாக்கும் விதிகளை கொண்டு வருவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை!

  • June 18, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அணு ஆயுத உற்பத்தியில் பலம் வாய்ந்த நாடு தொடர்பில் ஸ்வீடன் வெளியிட்ட தகவல்

  • June 18, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அணு ஆயுத உற்பத்தியில் பலம் வாய்ந்த நாடு எது என்ற விபரங்களை, ஸ்டாக்ஹோமை சேர்ந்த சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் — ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து, உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அணு ஆயுத மோதல் தொடர்பான அச்சுறுத்தல் பேசுபொருளாகி உள்ளது. இந்த நேரத்தில், இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அணு ஆயுத பலம் கொண்டுள்ள நாடு வலிமையான நாடாக […]

ஐரோப்பா

வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை – டுபாய் அரச ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்பு

  • June 18, 2025
  • 0 Comments

டுபாயில் அரச ஊழியர்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை நேரத்தையும் குறைத்து டுபாய் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்தாண்டு கோடை காலத்தையொட்டி, அரசு ஊழியர்களுக்கு வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தாண்டும் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதங்கமைய, குரூப் 1 அரசு ஊழியர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை 8 மணிநேரம் (காலை 7.30 […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

மோசமடையும் நிலைமை – இஸ்ரேலில் வசிக்கும் சீனர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு

  • June 18, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் வசிக்கும் சீன குடிமக்களைக் நாட்டை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலில் உள்ள சீனத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. வான்வெளி மார்க்கங்கள் மூடப்பட்டிருப்பதால் தரைவழியாக வெளியேறுமாறு சீனக் குடிமக்களை தூதரகம் கேட்டுக்கொண்டது. நிலைமை மோசமடைவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் குடிமக்களுக்கு அனுப்பிய அறிக்கையில் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டது. அது போன்ற அறிவுரையை சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகியவையும் வெளியிட்டுள்ளன.

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயமா? அமைச்சர் விளக்கம்

  • June 18, 2025
  • 0 Comments

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதென வெளியாகும் தகவலில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டரை மாதங்களுக்குப் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் விலை […]

இந்தியா செய்தி

ஆர்மீனியாவுக்கு அழைத்துச் செல்லப்படும் ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள்

  • June 17, 2025
  • 0 Comments

ஈரானில் படிக்கும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்மீனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். “நான் வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசினேன், முதலில் ஒரு திட்டத்தின் கீழ், அதிக ஆபத்து உள்ள பகுதிகளிலிருந்து, குறிப்பாக தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹானில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்,” என்று அப்துல்லா தெரிவித்துள்ளார். முதலில் மாணவர்களை […]

Skip to content