லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்ட 50 பேர் கைது!
தடைசெய்யப்பட்ட குழுவான பாலஸ்தீன நடவடிக்கைக்கு ஆதரவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற சதுக்கத்தில் டிஃபெண்ட் அவர் ஜூரிஸ் ஏற்பாடு செய்த போராட்டத்தில், “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன். நான் பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” என்ற வாசகத்தை கையால் எழுதப்பட்ட பதாகைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ், ஜூலை மாதம் பாலஸ்தீன நடவடிக்கைக் குழுவை அரசாங்கம் தடை செய்தது. […]