இந்தியா விளையாட்டு

130 ஓட்டங்களுக்கு டெல்லி அணியை கட்டுப்படுத்திய குஜராத்

  • May 2, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் உள்ளூர் அணியான குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. முகமது ஷமியின் வேகப்பந்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. துவக்க வீரர் பில் சால்ட், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து வார்னர் 2 ரன், ரிலி ரூசோ 8 ரன், மணீஷ் பாண்டே ஒரு ரன், பிரியம் […]

ஆப்பிரிக்கா செய்தி முக்கிய செய்திகள்

உகாண்டாவில் பிரதி அமைச்சர் சுட்டுக்கொலை!

  • May 2, 2023
  • 0 Comments

உகண்டாவின் பிரதியமைச்சர் ஒருவர்,  தனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரினால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாலின மற்றும் தொழிலாளர்கள் துறை பிரதியமைச்சர் சார்ள்ஸ் ஒகேலோ என்கோலாஇ அவரின் வீட்டில் வைத்து இன்றுகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற இராணுவ கேணல் ஒருவராவார். பாதுகாப்பு பிரதியமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார். பரதியமைச்சர் என்கோலாவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தஇ உகண்டா தேசிய இராணுவத்தின் சிப்பாய் ஒருவரே அவரை சுட்டுக்கொன்றுள்ளார். இச்சிப்பாய்க்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் ஏதேனும் வாக்குவாதம் இடம்பெற்றதா என்பது இன்னும் தெரியவில்லை. […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ராஜபக்ஷக்களால் 6 இலட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் – பாட்டாலி சம்பிக்க ரணவக்க!

  • May 2, 2023
  • 0 Comments

தொழிலாளர்களின் உரிமை பற்றி பேசும் ராஜபக்ஷர்களினால் கடந்த ஒரு ஆண்டுக்குள் மாத்திரம் ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள் என 43 ஆவது படையணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ராஜகிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற, நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் புழுதி புயல் – 6 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகில் உள்ள  இல்லினாய்ஸ் மாகாணத்தில் புழுதி புயல் வீசிய நிலையில், வாகனங்கள் ஒன்றோடு, ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சிக்கி  6 பேர் பலியானதுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றுள்ளதுடன், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக இல்லினாய்ஸ் போலீசார் கூறும் போது ’60 பயணிகள் மற்றும் 30 வணிக வாகனங்கள் விபத்துக்குள்ளாகியது’ என்றனர். சிகாகோ மற்றும் […]

இலங்கை

நுவரெலியாவில் புதைக்கப்பட்டிருந்த அரிசி மீட்பு..!

  • May 2, 2023
  • 0 Comments

குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்ட சம்பவமொன்று நுவரெலியா-நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது. அரிசி விலை கடந்த காலங்களில் அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக 3,000 கிலோ கிராம் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், 1,600 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யப்பட்டது. அதற்கிடையில் அரிசியின் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது. ஆகையால், மீதமிருந்த 1,400 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அரிசி காலவதியானதால், ​அப்பகுதி […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஆயுதப் பற்றாக்குறையால் திண்டாடும் ரஷ்யா!

  • May 2, 2023
  • 0 Comments

போரில்  வெற்றிபெற ரஷ்யப் படைகளிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெம்ளின் பாதுகாப்பு மந்திரி கர்னல்-ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் பதவி விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது,  மிஜின்ட்சேவின் பதவி நீக்கம் உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை, என்றாலும்,   எதிர்காலம் பற்றிய ஊகங்கள் “ரஷ்யாவின் தளவாட சிக்கல்கள் எவ்வாறு உள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது” இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் […]

செய்தி தமிழ்நாடு

தென்னாடுடைய சிவனே போற்றி என கோசத்துடன் நடைபெற்ற தேரோட்டம்

  • May 2, 2023
  • 0 Comments

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான,இக்கோயிலில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த தலமான இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். சித்திரை திருவிழா முதல் நிகழ்வாக கோயிலில் கடந்த 25ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்கள் காட்சியளிக்கும் வைபவம் நடந்தது. இதையடுத்து நேற்று […]

செய்தி தமிழ்நாடு

மதுரை வந்தடைந்த வைகை நீருக்கு பூத்தூவி வரவேற்பு

  • May 2, 2023
  • 0 Comments

மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை கள்ளழகர் புறப்பாடு நடைபெற்று நாளை மறுநாள் கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற பின்னர் 5ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து கடந்த 30 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து 30 ஆம்தேதி முதல் இன்றுவரை 750கன அடி நீரும்,நாளை முதல் 5 ஆம் தேதி வரை 500 கன […]

இலங்கை

இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

  • May 2, 2023
  • 0 Comments

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டிள்ளது. 2023ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிடும் ஆணைக்குழு, இலஙகியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. அதோடு இலங்கைக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தான், சீனா, நைஜீரியா மற்றும் நிகரகுஆவா ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச மத […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

தந்திரோபாயங்களை மாற்றிய ரஷ்யா : பொதுமக்களை குறிவைப்பதாக குற்றச்சாட்டு!

  • May 2, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிராக ஏவுகணைகளைப் பயன்படுத்தும் போது ரஷ்யப் படைகள் தந்திரோபாயங்களை மாற்றியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியின் ஆலோசகர் Mykhailo Podolyak  தெரிவித்துள்ளார். இதன்படி ரஷ்ய படைகள் தற்போது சிவிலியன் கட்டமைப்புகளை குறிவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “எந்த சந்தேகமும் இருக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் சிவிலியன் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் நேரடி வேலைநிறுத்தங்களை நடத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல இலக்குகளை அடைய கிரெம்ளின் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது என்றும் அவர் […]

You cannot copy content of this page

Skip to content