செய்தி தமிழ்நாடு

100 பவுன் தங்கம் கொள்ளை மூன்று பேர் கைது

  • May 3, 2023
  • 0 Comments

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலனி பகுதி சேர்ந்த ராஜேஸ்வரி வயது 60.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அவருடன் அறிமுகமாகி பின்னர் இருவரும் தொழில் செய்து வந்து உள்ளனர். வர்ஷினி,தனக்கு தெரிந்த இடைதரகர்கள் எனக் கூறி அருண்குமார்,சுரேந்தர்,பிரவீன் என மூன்று பேரைக் ராஜேஷ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்து உள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டில் வர்ஷினி மற்றும் அவருடன் பழகிய […]

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • May 3, 2023
  • 0 Comments

ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று பயங்கர துப்பாக்கிச் சூடு சண்டை நடந்தது. வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பிச்நாட் மச்சில் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவம் மற்றும் குப்வாரா பொலிஸார் இணைந்து பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள […]

உலகம் செய்தி

1500 வீரர்களை எல்லைக்கு அனுப்பும் ஜோ பைடன்!

  • May 3, 2023
  • 0 Comments

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க இராணுவ வீரர்கள், 1500 பேரை அனுப்ப அதிபர் ஜோ பைடன் தீர்மானித்துள்ளார். ஜோபைடனின் ஆட்சிக்  காலத்தில் சட்ட விரோதமாக எல்லையில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே அவர் அதிபர் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் மெக்சிகோ எல்லைக்கு கூடுதல் படையை அனுப்ப ஜோபைடன் முடிவு செய்து உள்ளார். […]

இலங்கை

இலங்கை முழுமையாக மின் வெட்டில் இருந்து வெளியே வரவில்லை – அலி சப்ரி!

  • May 3, 2023
  • 0 Comments

இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை என்றாலும்இ நம்பிக்கை அளிக்ககூடிய அறிகுறிகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்இ ‘நம்பிக்கையின் ஒளிக்கீறுகள் காணப்படுகின்றன ஆனால் நாங்கள் இன்னமும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை. அமெரிக்க டொலரின் ஸ்திரத்தன்மைஇ சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகள் இந்தநம்பிக்கைக்கு பங்களிக்கின்றன. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் கட்டுப்பாட்டின் கீழ் […]

செய்தி தமிழ்நாடு

10 லட்சம் மதிப்பில் 2500 மீட்டர் தூரம் ஏரி

  • May 3, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயங்குடி பகுதியில் உள்ள செங்கல் நீர் ஏரிவடிகால் வாரியைதூர் வாரும் பணியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் சிவ.சீ.மெய்ய நாதன் துவக்கி வைத்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ண ராஜ், அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த தூர்வாரும் பணி 10 லட்சம் மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்பட்டது.

ஐரோப்பா

பள்ளிக்கூடத்தில் 14 வயது மாணவன் துப்பாக்கிச்சூடு; 8 மாணவர்கள் பலி

  • May 3, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பல்கிரெடி மாகாணம் விரகார் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் இன்று வழக்கம் போல மாணவ-மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினான். ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் […]

இலங்கை செய்தி

ஐ.எம்.எஃபின் கடனில் அரச ஊழியர்களுக்கே முதல் நிவாரணம்!

  • May 3, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கு முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒரு துறை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்த வேளையில் அனைத்து அரச ஊழியர்கள் மீதும் பாரிய […]

செய்தி தமிழ்நாடு

சீறிப்பாய்ந்த காளைகள் சிதறிய வீரர்கள்

  • May 3, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் பங்கேற்க புதுக்கோட்டை, சிவகங்கை,மதுரை, திண்டுக்கல்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும்‌ மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டு திடலில் அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடங்கினர். வெற்றிபெற்ற மாடுகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இம்மஞ்சுவிரட்டு போட்டியில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரிமளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வீரர்கள் […]

செய்தி தமிழ்நாடு

வண்டியுடன் வெள்ள நீரில் சிக்கிய இளைஞர்

  • May 3, 2023
  • 0 Comments

கோவையில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் சுந்தராபுரம்,மாச்சம்பாளையம், பிள்ளையார்புரம், மதுக்கரை பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மதுக்கரை, வேலந்தாவளம் வழியாக கேரளா செல்லும் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்திற்கு 4 அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற நிலையில், […]

ஐரோப்பா

இங்கிலாந்து விற்பனையாளர்களிடமிருந்து திரும்பப் பெறப்படும் 6 வகை சாக்லெட்டுக்கள்!

  • May 3, 2023
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 6 சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக உலகப் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது. பாக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிஸ்டீரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா, அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கேட்பரியின் தயாரிப்புகளில் லிஸ்டீரியாசிஸ், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்ற […]

You cannot copy content of this page

Skip to content