ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு – பொலிஸாரை தாக்கிய நபர் சுட்டுக்கொலை

  • May 4, 2023
  • 0 Comments

தெற்கு அவுஸ்திரேலியாவின் உள்ளூர் நகரமொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதோடு, நபர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அடிலெய்டில் இருந்து வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிஸ்டல் புரூக் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்களைக் கொண்டு வர ஹெலிகாப்டரும் மருத்துவ உதவிகளை ஏற்றிச் சென்றது. பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் கிடைத்து வருவதாக தெற்கு அவுஸ்திரேலிய மாநில […]

வட அமெரிக்கா

திடீரென வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி!

  • May 4, 2023
  • 0 Comments

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் கால் சதவீத புள்ளியை உயர்த்தியுள்ளது. கடந்த 14 மாதங்களில் அது 10 ஆவது உயர்வாக கருதப்படுகின்றது. விலைவாசியை நிலைப்படுத்த மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 16 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்த்தியுள்ளது. தற்போதைக்கு அந்த நடவடிக்கையே இறுதியாக இருக்கும் மத்திய வங்கி கோடி காட்டியிருந்தது. வட்டி விகிதத்தின் உயர்வால் சொத்து, முதலீடு ஆகியவற்றுக்கான தேவை குறைவதைக் காணமுடிவதாக அதிகாரிகள் கூறினர். பணவீக்கம் இன்னும் அதிகமாக இருப்பதாக மத்திய வங்கித் […]

இலங்கை

இலங்கை அரச வங்கிகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

  • May 4, 2023
  • 0 Comments

இலங்கையில் கடந்த பல நாட்களாக அரச வங்கிகளில் புதிய ATM அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, புதிய ATM அட்டைகளை தம்மால் பெறமுடியவில்லை என்று அரச வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ATM அட்டைகள் இல்லாத காரணத்தினால் பாரம்பரிய முறைப்படி வங்கிக்குச் சென்று வரிசையில் நின்று நேரடியாகவே பணத்தை மீளப் பெறவேண்டியுள்ளதாக வாடிக்கையாளர்கள் குறிப்படுகின்றனர். இதனால் நேர விரயமும் அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அரச வங்கிகளில் புதிய ATM […]

ஆசியா

சிங்கப்பூர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • May 4, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் மக்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானோர் கடந்த ஓராண்டில் குறைந்தது ஒரு முறை போதைப்பொருளை உட்கொண்டுள்ளனர் என மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. போதைப்பொருளை உட்கொண்டோரில் சுமார் ஐந்தில் ஒருவர், ஆர்வமே அதற்கு முக்கியக் காரணம் என்று கூறினர். மற்றவர்கள் தங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள அது உதவக்கூடும் என்று நம்பினர். 10 சதவீதத்திற்கு சற்றுக் கூடுதலானோர் நண்பர்களின் தூண்டுதலால் போதைப்பொருளை உட்கொண்டனர். கருத்தாய்வில் கலந்துகொண்டோரில் பாதிக்கும் மேற்பட்டோர் முதலில் உட்கொண்ட போதைப்பொருள் கஞ்சா என்று தெரிவித்தனர். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய வன்முறை சம்பவங்கள்

  • May 4, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற மே தின ஊர்வலங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. உலகளாவிய ரீதியில் மே 1 ஆம் திகதி உழைப்பாளர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ள்து. ஜெர்மனியில் பல நகரங்களில் மே 1 ஆம் திகதி மே தின கெண்டாட்டங்கள் நடை பெற்று இருந்தன. இந்நிலையில் பேர்ளினில் பல இடங்களில் மே தின கூட்டங்கள் நடை பெற்ற பொழுது பல வன்முறைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பல இடங்களில் குழுக்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதில் பெண்கள் நடாத்திய […]

ஐரோப்பா

பிரான்ஸில் திரையங்குகளில் குவியும் மக்கள்

  • May 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் திரையங்கிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . கடந்த ஏப்ரல் மாதத்தில் 19 மில்லியனுக்கும் அதிகமானோர் திரையரங்கிற்குச் சென்றுள்ளனர். கொவிட் 19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் பதிவாகியுள்ள அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். ஏப்ரல் மாதத்தில் 19.01 மில்லியன் பேர் திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களை பார்வையிட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 37.8% சதவீத உயர்வாகும். ஏப்ரல் மாதத்தில் வெளியான திரைப்படங்களில் “the three Musketeers” திரைப்படமும், “the honor of […]

செய்தி

இலங்கையில் புதிய வகை காளான்கள்!

  • May 4, 2023
  • 0 Comments

இலங்கையில் புதிய வகை காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதிய காளான் வகை கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் மே பா (FA) லுவன்ஸ் பல்கலைக்கழகத்திலும் சீன ஆய்வு நிறுவனத்திலும் ஆய்வாளராக செயற்பட்ட கலாநிதி அசெனி எதிரிவீர உள்ளிட்ட ஆய்வாளர் குழாம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை

கல்கிஸ்ஸயில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – பல பெண்கள் கைது

  • May 4, 2023
  • 0 Comments

கொழும்பு புற நகர பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விடுதியின் முகாமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்ஸ, விஜேசிறிவர்தன மாவத்தை பகுதியில் ஆயுர்வேத சேவை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் நிலையத்தின் முகாமையாளர் உட்பட 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 43 வயதுகளுடைய […]

செய்தி

பெலாரஸில் இலங்கை மருத்துவ மாணவர் சடலமாக மீட்கப்பு

  • May 3, 2023
  • 0 Comments

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி க்ரோட்னோ அரச மருத்துவப் பல்கலைக்கழக விடுதியின் அறையில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய இலங்கைப் பிரஜையின் மரணம் தொடர்பில் பெலாரஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கண்டியைச் சேர்ந்த 24 வயதான திஷான் குலரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இறக்கும் போது பெலாரஸில் உள்ள க்ரோட்னோ மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் படித்து வந்தார். குலரத்னவின் சடலம் பல்கலைக்கழகத்தில் இருந்த சக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, உயிரிழந்தவருக்கு பல அழைப்புகள் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் கெர்சனில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி

  • May 3, 2023
  • 0 Comments

உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்ய தாக்குதல்களில் புதன்கிழமை 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல்கள், நகரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் இரண்டையும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒரு ரயில் நிலையம், ஒரு வீடு, ஒரு வன்பொருள் கடை, ஒரு மளிகை பல்பொருள் அங்காடி மற்றும் எரிவாயு நிலையம்” ஆகியவற்றை தாக்கியதாக ஜனாதிபதி Volodymyr Zelensky கூறினார். கெர்சன் நகரில் இருந்து ரஷ்யப் படைகள் கடந்த நவம்பரில் பின்வாங்கின. “தற்போதைக்கு, 21 பேர் […]

You cannot copy content of this page

Skip to content