வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஒடும் ரயிலில் கழுத்தை நெரித்து கொலை !

  • May 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள சுரங்கப் பாதை ரயிலில் மைக்கேல் ஜாக்சன் போன்ற தோற்றம் கொண்ட நபர், கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த ஜோர்டன் நேலி(30) என்பவர், மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடுவதோடு அவர் போலவே தோற்றம் கொண்டவர் ஆவார். வறுமையில் வாடிய அவர் தங்குவதற்கு வீடில்லாமல் சாலையோரங்களில் தங்கி வாழ்ந்துள்ளார். கடந்த மே 1ஆம் திகதி மன்ஹாட்டன் அருகே சுரங்கப் பாதை ரயிலில் பயணம் செய்த அவர் தனது […]

செய்தி தமிழ்நாடு

பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

  • May 4, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் த்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கோவில் விழாக்களில் முக்கிய விழாவான தேர் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. சுந்தர வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்தியாக திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து பெண்கள் வடம் பிடித்து தேர் இழுக்க ஆனந்த ஐயங்கார் தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேர் மாட வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்!

  • May 4, 2023
  • 0 Comments

பதில் நிதியமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது நிதியமைச்சரின் கடமைகளை நிறைவேற்றும் வகையிலேயே பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பான நற்சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 50வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதியின் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

 சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்த ஜெலென்ஸ்கி!

  • May 4, 2023
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து நேரப்படி காலை 7 மணியளவில் டச்சு செனட் கட்டிடத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகவும், அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. “உக்ரைனுக்கு நீதி இல்லாமல் அமைதி இல்லை” என்ற தலைப்பில் இதன்போது ஜெலென்ஸ்கி உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, அவரது வருகை பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அரசாங்க செய்தித் […]

இலங்கை செய்தி

ஆடை ஏற்றுமதி வீழ்ச்சியடைய கூடும்

  • May 4, 2023
  • 0 Comments

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் இந்தவருடம், ஒரு பில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடையக்கூடும் என இலங்கையின் உயர் மட்ட தொழில்நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேசத்தில், தேவை குறைவடைந்துள்ளதால், தெற்காசிய நாடுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படப்பட்டுள்ளது. ஆடை, இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறையில் ஒன்றாக உள்ளது. கடந்த வருடம் ஆடை ஏற்றுமதி மூலம் 5.95 பில்லியன் டொலர் வருமானமாக ஈட்டப்பட்டது. எனினும், 2023ம் ஆண்டின் முதல் காலாண்டின் ஆடை தொழில்துறையின் செயல்திறன் மற்றும் ஆடை […]

இலங்கை செய்தி

மீண்டும் கொவிட் – சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கோரிக்கை

  • May 4, 2023
  • 0 Comments

  கொவிட் 19 பரவல் மற்றும் இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினமும் கொவிட் 19 தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் குறிப்பாக வெளிப்புற அமைப்புகளில் இருக்கும்போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். தற்போது நோய் பரவும் […]

செய்தி தமிழ்நாடு

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் Inclusion கல்வியை நோக்கிய பயணம்

  • May 4, 2023
  • 0 Comments

சென்னை, இந்தியா – DLearners,NSS மற்றும் YRCS கிளப் ஆஃப் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியுடன் இணைந்து, ஏப்ரல் 29,சனிக்கிழமையன்று Inclusion கல்வியை நோக்கிய ஒரு பயணம் INCLUSION மேளாவை நடத்தியது. கல்வியாளர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் மற்றும் பிற சமூக உறுப்பினர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, INCLUSION கல்வியின் முக்கியத்துவத்தைக் கொண்டாட ஒன்றிணைந்ததன் மூலம் இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழக அரசின் முன்னாள் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திருமதி பூங்கோதை ஆலடி அருணா சிறப்பு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தையிட்டி பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவான இராணுவத்தினர்!

  • May 4, 2023
  • 0 Comments

தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்,  உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள்,  வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு  வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் தீவிபத்து!

  • May 4, 2023
  • 0 Comments

தெற்கு ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின்  கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் அருகே உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தில் குறித்த தீவிபத்து நேர்ந்துள்ளது. ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தின் காரணமாக உயர்சேதம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதியை  கிரிமியாவுடன் இணைக்கும் பாலம் அருகே மேற்குப் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு தீப்பிடித்த இரண்டு நாட்களில் […]

இலங்கை செய்தி விளையாட்டு

வழக்கு விசாரணை தாமதம் | அபராதம் கோரும் தனுஷ்க

  • May 4, 2023
  • 0 Comments

  இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் சட்டத்தரணி, நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் சட்டக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வாதத்தை சமர்ப்பித்துள்ளார். வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால் நீதிமன்ற கட்டணத்தை உரிய அதிகாரிகளே செலுத்த வேண்டும் என தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போதே தனுஷ்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர். பிணை கோரிக்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு […]

You cannot copy content of this page

Skip to content