ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க தயாராகும் அரசாங்கம்!

  • May 5, 2023
  • 0 Comments

ஜெர்மனி அரசாங்கமானது கொவிட் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த கொரோனா காலங்களின் பல இளைஞர் யுவதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இளைஞர் யுவதிகள் இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ஜெர்மன் அரசாங்கமானது கடந்த ஆண்டு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எதிர்வரும் நேற்று தொடக்கம் அவர்களுக்கு தலா 200 யூரோ வவுச்சர் வழங்கப்படும். அதாவது கலாசார விடயங்களில் இவர்கள் இந்த […]

இலங்கை

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை – சோதிடரின் அதிர்ச்சி செயல்

  • May 5, 2023
  • 0 Comments

பல பெண்களை பேஸ்புக் ஊடாக ஏமாற்றிய ஜோதிடர் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு பெண்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படுகின்றது. இந்தச் சந்தேக நபர் தற்போது மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள பண மோசடி தொடர்பான வழக்கொன்றில் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • May 5, 2023
  • 0 Comments

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான […]

அறிந்திருக்க வேண்டியவை

பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ நீரோட்டம் – வெப்ப நிலை தொடர்பில் எச்சரிக்கை

  • May 5, 2023
  • 0 Comments

உலகளவில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கவுள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் பசுபிக் பெருங்கடல் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலுக்கு அமைதியான கடல் என்ற பெயரும் உண்டு. உலக அளவில் தற்போதைய பருவநிலை மாற்றங்களால் உலக அளவில் பல்வேறு இயற்கை பேரிடர்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஐ நா அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் எல் நினோ நீரோட்டம் உருவாக […]

உலகம் முக்கிய செய்திகள்

இன்று வானில் ஏற்படும் அரிதாக நிகழ்வு – வெற்று கண்களால் பார்க்கலாம்

  • May 5, 2023
  • 0 Comments

இன்று புறநிழல் சந்திரகிரகணம் நிகழ இருப்பதாகவும் இது ஒரு அரிதான நிகழ்வு எனவும் நாசா தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்தக் கிரகணத்தை வெற்று கண்களால் பார்க்க முடியும் எனவும் இலங்கை – இந்திய நேரப்படி இரவு 8:44 முதல் அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் என்றும் நான் சா தெரிவித்து இருக்கிறது. பொதுவாக சந்திர கிரகணம் என்பது முழு நிலவின் போது மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வாகும். பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள மோசடிகள் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • May 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் மின்-வர்த்தக மோசடிச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முந்திய ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு முறைப்பாடுகளின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் அதிகரித்தது. 2021இல் கிட்டத்தட்ட 2,800 மோசடிச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஆண்டின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக அதிகரித்துள்ளது. உள்துறை அமைச்சு இணைய வர்த்தக நிறுவனங்களின் தரத்தை ஒன்று முதல் 4 வரை என்று வகுத்திருக்கிறது. ஒன்று என்றால் ஆபத்தானது. இணைய வர்த்தகத் தளம் 4 […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையானவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • May 5, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுததாரிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பிரான்சின் தெற்கு நகரமான Marseille – 13 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள சுற்றுலாப்பகுதியான Château-Gombert இற்கு வருகை தந்திருந்த 30 வயதுடைய ஒருவர், தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது மகிழுந்தில் ஏற முற்பட்டபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 30 வயதுடைய குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 2015 […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தொடர்பில் வெளிவந்த தகவல்

  • May 5, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டை தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றது. ஜெர்மன் அரசானது 49 யூரோ பயண அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் முதல் பயண அட்டையானது நடைமுறைக்கு வந்துள்ளது. இதேவேளையில் பயண அட்டையை பல லட்சக்கணக்கானோர் இதுவரை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல புகையிரத நிலையங்கள் மற்றும் இந்த பயண அட்டையை விற்கின்ற முகவர் நிலையங்களுக்கு முன்னால் பலர் வரிசையில் காத்திருந்து இந்த பயண அட்டையை கொள்வனவு செய்ததாக தெரிய வந்திருக்கின்றது. மேலும் இந்த […]

இலங்கை

இலங்கை பரவும் 3 ஆபத்துக்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

  • May 5, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் டெங்கு, மலேரியா, எலிக் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் 48 மணி நேரத்துக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெங்கு, மலேரியா மற்றும் எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் தற்போது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன. எனவே, 48 […]

ஐரோப்பா

பிரான்ஸில் பல வாகனங்கள் தீக்கிரை – அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞன்

  • May 5, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் அண்மைய நாட்களில் பல்வேறு வாகனங்களை தீக்கிரையாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். முதலாம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 3 ஆம் வட்டாரத்தின் rue Meslay வீதியில் தரித்து நிக்கவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சில எரியூட்டப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர். அங்கு வாகனங்களை எரியூட்டிக்கொண்டிருந்த 23 வயதுடைய இளைஞனை சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்தனர். அவன் […]

You cannot copy content of this page

Skip to content